மூத்த பத்திரிகையாளர் கோபு காலமானார்

ekuruvi-aiya8-X3

gobuஇலங்கையின் மூத்த தமிழ் பத்திரிகையாளரான கோபு எனப்படும் எஸ்.எம்.கோபாலரத்தினம் இன்று தனது 87-வது வயதில் மட்டக்களப்பில் வைத்து காலமானார்.

தமிழ் பத்திரிகை துறையில் 1953ம் ஆண்டு இணைந்து கொண்ட இவர், இலங்கையில் பிரபலமான பல்வேறு ஊடகங்களிலும் பணியாற்றிய பெருமைக்குரியவர்.

யாழ்பாணத்தில் வெளிவந்த “ஈழமுரசு” பத்திரிகை ஆசிரியராக பணியாற்றிய வேளை, 1987ம் ஆண்டு நவம்பர் 23ம் திகதி இந்திய அமைதிப் படையினரால் கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் வரை தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந்த அனுபவத்தை தனது “ஈழ மண்ணில் ஓர் இந்திய சிறை” என்ற தலைப்பில் அவர் எழுதினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுரை “ஜுனியர் விகடன்” இதழில் தொடர் கட்டுரையாக வெளியாகியிருந்தன.

இலங்கை தமிழ் பத்திரிகை உலகில் கோபு, எஸ்.எம்.ஜி என பலராலும் அறியப்பட்ட எஸ்.எம்.கோபாலரத்தினம் ஆணித்தரமான அரசியல் தலையங்கங்கள், கட்டுரைகள் மற்றும் செய்திகள் மூலம் துணிச்சல் மிக்க பத்திரிகையாளராக விளங்கினார்.

Share This Post

Post Comment