சம்பந்தனிடம் கையளிக்கும் நிகழ்வு பிற்போடப்பட்டது

ekuruvi-aiya8-X3

north provincialவடமாகாண சபையினால் உருவாக்கபட்டுள்ள அரசியலமைப்பு சீர்திருத்த யோசனைகள் அடங்கிய பிரதியை, தழிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சியின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் கையளிக்கும் நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு இன்று யாழ் பொது நூலகத்தில் இடம்பெறவிருந்தது.

இந்நிலையில் வடமாகாண முதலமைச்சர், சுகவீனம் காரணமாக கொழும்பில் இருந்து பிரயாணம் செய்வது வசதி அற்றது எனவும் நிகழ்ச்சியை ஒத்திப் போடுவதே சிறந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக இன்றைய கையளிப்பு நிகழ்வு பிற்போடப்படுவதாக வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்தார்.

அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான முன்மொழிவு யோசனைகள் வடமாகாண சபையினால் தயாரிக்கப்பட்டு கடந்த 22ம் திகதி சபையில் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.

Share This Post

Post Comment