உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும் கைதிகளுக்கு ஆதரவாக பல்கலைக்கழக மாணவர்கள்!

ekuruvi-aiya8-X3

missingஅனுராதபுர சிறைச்சாலையில் சாகும்வரையிலான உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்துக்கு ஆதரவாகவும், உடனடி தீர்வினை வழங்கக் கோரியும், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த மூன்று கைதிகளினதும் விசாரணைகள் வவுனியா நீதிமன்றத்தில் நடைபெற்று நிறைவடையவுள்ள நிலையில் திடீரென அனுராதபுரம் சிறைச்சாலைக்கு பாதுகாப்பு அமைச்சினால் மாற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இராசதுரை திருவருள் (வயது 40), கரணவாயை சேர்ந்த மதியரசன் சுலக்ஸன் (வயது 30), நாவலப்பிட்டியை சேர்ந்த கனேசன் தர்சன் (வயது 26) ஆகியோர் கடந்த 25 ஆம் நாளிலிருந்து உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றவேண்டுமெனக் கோரி யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலைப்பீட மாணவர்கள் இன்றிலிருந்து போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

Share This Post

Post Comment