உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இரண்டு தமிழ் அரசியல் கைதிகளின் நிலை கவலைக்கிடம்!

jejilபயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அனுராதபுரத்திற்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று தமிழ் அரசியல் கைதிகளில் இருவரின் நிலை கவலைக்கிடமாகிச் சென்றதால் அவ்விருவரும் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2009 ஆண்டு  கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள  தமிழ் அரசியல் கைதிகளான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இராசதுரை திருவருள் (வயது 40) கரணவாயை சேர்ந்த மதியரசன் சுலக்ஸன் (வயது 30) நாவலப்பிட்டியை சேர்ந்த கனேசன் தர்சன் (வயது 26) ஆகியோருக்கு  கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து வவுனியா நீதிமன்றில் வழக்கு நடைபெற்றது.

இந்த வருடம் குறித்த வழக்கு நிறைவடையும் நிலையில் இந்த வழக்கை சட்டமா அதிபர் திணைக்களத்தினர் தற்போது அனுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றியுள்ளனர்.

அங்கு மொழிப்பிரச்சனை உள்ள காரணத்தினால் தமது வழக்கு வவுனியா அல்லது யாழ்ப்பாண நீதிமன்றங்களுக்கு மாற்ற வேண்டும்  என கோரி இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை தொடர்கின்றனர்.

இவர்களில்  மதியரசன் சுலக்ஸன்  மற்றும் இராசதுரை திருவருள் ஆகியோரின் உடல்நிலை மோசமடைந்துள்ள நிலையில் இன்று வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கு ஆதரவாக அனைத்து அரசியல் கைதிகளும் எதிர்வரும் திங்கட்கிழமை அடையாள உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.






Related News

  • பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு ஆதரவான மனுக்களும் விசாரணைக்கு
  • அனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன் – ரணில்
  • நம்பிக்கைக்குரிய தலைவர் மஹிந்த மட்டுமே
  • இலங்கையில் எந்த அரசு அமைந்தாலும் தமிழர்களுக்கு பாதுகாப்பு கிடையாது
  • பரந்த கூட்டணியொன்றை உருவாக்கி களமிறங்குவோம் – நாமல்
  • மஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்தார்
  • இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவர்
  • ஜனநாயக விரோதமான செயலை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார்
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *