அரசியல் கைதிகளை விடுதலை செய்! – யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பேரணி

sdsd

IMG_3621அநுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் வழக்கு விசாரணைகளை மீளவும் வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றுமாறு கோரியும் சிறையிலுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக் கோரியும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நேற்று காலை யாழ்ப்பாணத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.

காலை 10.30 மணியளவில் யாழ்.பல்கலைக்கழக முன்றலில் இருந்து ஆரம்பமாகிய பேரணி கோவில் வீதியிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் வரை சென்றது. அங்கு ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் ஆணையாளருக்கான மகஜர் ஒன்றை கையளித்தனர். அதன் பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சென்று ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்றை வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளரிடம் கையளித்திருந்தனர்.

Share This Post

Post Comment