அரசியல் கைதிகள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு- கூட்டமைப்பு உறுதி

Facebook Cover V02

tna-300x200அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, அரசியல் கைதிகள் விவகாரம் வெகுவிரைவில் முடிவுக்கு கொண்டுவரப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள், நீதி அமைச்சருடன் நடத்திய சந்திப்பின் அடிப்படையில் அரசியல் கைதிகளை கட்டம் கட்டமாக விடுவிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளில் புனர்வாழ்வுக்கு உட்படுத்த தகுதி உடையவர்கள் எனக் கருதப்படும் 23 பேரது பெயர்ப் பட்டியல் அரசினால் வெளியிடப்பட்டுள்ளது.

விடுதலை புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 96 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்களுள் 23 பேரே தற்போது விடுவிக்கப்படவுள்ளனர்.

இந்நிலையில், ஏனையோரையும் விடுதலை செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டமைப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

Share This Post

Post Comment