கைநாட்டு தான் வைத்தார் ஜெயலலிதா

Thermo-Care-Heating

jayasign28_vc2_18177கடந்த சட்டசபை தேர்தலில், பணப்பட்டுவாடா புகாரில் அரவக்குறிச்சி,தஞ்சாவூர் தொகுதிகளின் தேர்தலை ரத்து செய்தது தேர்தல் கமிஷன். திருப்பரங்குன்றம் தொகுதியில் வென்ற அதிமுக எம்.எல்.ஏ சீனிவேல் மரணமடைந்தார். தஞ்சாவூர், அரவக்குறிச்சி,திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளின் இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. நவம்பர் 19-ம் திகதி இந்த மூன்று தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த மூன்று தொகுதிகளுக்கான வேட்புமனு தொடங்கியது.திமுக, அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்ட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு தனிச்சின்னம் ஒதுக்கப்படும். இந்த தனிச்சின்னம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அல்லது பொதுச் செயலாள்ர்கள் அல்லது கட்சியால் அங்கீகரிக்கப்பட்ட ஒருவரின் ஒப்புதல் கடிதம் அளித்த பிறகே வேட்பாளர்களுக்கு அந்த கட்சியின் சின்னம் வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் போது, இந்த அத்தாட்சி கடிதத்தையும் வழங்கினால் தான் அங்கீகரிக்கப்பட்ட சின்னங்கள் வழங்கப்படும்.

jayablacksign_18361

இந்த அத்தாட்சிக் கடிதம், FORM-B எனப்படும்.இந்த FORM-B தேர்தல் நடத்தும் தொகுதியின் அதிகாரிக்கு வேட்பாளரால் வழங்கப்பட வேண்டும்.இந்த FORM-Bல் தொகுதியின் பெயர்,தொகுதியின் எண்,போட்டியிடும் வேட்பாளர் பெயர், வேட்பாளரின் தந்தையின் பெயர்,அவருடைய முகவரி ஆகியவை எழுதப்பட்டு கட்சித் தலைவரின் கையெழுத்துப்போட்டு அனுப்பப்படும்.

1989-ம் ஆண்டில் இருந்து அதிமுகவில் இந்த FORM-Bல் கையெழுத்துப்போடும் நபர் ஜெயலலிதாதான். மூன்று தொகுதிகளில் நிறுத்தப்பட்டு இருக்கும் அதிமுக வேட்பாளர்களுக்கு FORM-B தரப்பட்டு இருக்கிறது.இந்த FORM-Bல் ஜெயலலிதாவின் கையெழுத்து இல்லை.அதற்குப் பதிலாக அவருடைய விரல் ரேகை பதிக்கப்பட்டு இருக்கிறது.ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையின் பேராசிரியர் P.பாலாஜி,இதற்கு ஒப்புதல் அளித்து இருக்கிறார்.அப்போலோ மருத்துவமனையின் மருத்துவர் பாபு ஆப்ரஹாம் சாட்சிக் கையெழுத்து போட்டு இருக்கிறார்.

கையொப்பம் இடப்பட்ட நபர் தற்போது கிரீம்ஸ் ரோட்டில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் இருக்கிறார்.tracheostomy செய்து இருப்பதால்,அவ்ரது வலது கையில் கையெழுத்து இடமுடியாத நிலையில் இருக்கிறார்.ஆதலால் அவரது இடது கை கட்டைவிரலின் பதிவினை பெற்று இருக்கிறோம் என குறிப்பிடபட்டு இருக்கிறது.

ஜெயலலிதா கையெழுத்துபோடும் நிலையில்கூட அவரது உடல்நிலை இல்லை என்பதையே இது காட்டுகிறது.
FORM-Bல் இன்னார் தான் கையெழுத்துப் போடுவார் என்பதை முன்கூட்டியே தேர்தல் கமிஷனுக்கு தெரிவித்து இருக்க வேண்டும்.அந்த அதிகாரத்தை வேறு ஒருவருக்கு மாற்றுவதாக இருந்தால், செயற்குழுவோ அல்லது பொதுக்குழுவோ கூடி முடிவெடுத்து அந்தத் தகவலை தேர்தல் கமிஷனிடம் அளிக்க வேண்டும்.அதன் பிறகு தான் வேறு ஒருவருக்கு FORM-Bல் கையெழுத்துப் போடும் அதிகாரம் மாற்றித் தரப்படும்.ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இன்னொருவருக்கு மாற்றித் தரும் சூழ்நிலை தற்போது இல்லை.

ideal-image

Share This Post

Post Comment