முதன்முறையாக டிரம்ப் – புதின் சந்திப்பு: கைகுலுக்கி மகிழ்ச்சி பரிமாற்றம்

ekuruvi-aiya8-X3

Trump-Putin-in-first-handshake-at-G20-summitஜெர்மனி நாட்டின் ஹம்பர்க் நகரில் ஜி-20 மாநாடு இன்று தொடங்குகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், துருக்கி அதிபர் தையீப் எர்டோகன், இந்திய பிரதமர் மோடி உள்பட பலநாட்டு தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். ஜெர்மனி வேந்தர் ஏஞ்சலா மெர்கல் மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.

உலக தலைவர்கள் ஒன்று கூடுவதால் ஹம்பர்க் நகரம் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து கைகுலுக்கி தனது மகிழ்ச்சியை பரிமாறி கொண்டார்.

விரைவில் இருவரும் தனியாக சந்தித்து இருநாடுகளுக்கு இடையில் நிலவிவரும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்கவுள்ள நிலையில் இன்று இருவருக்கும் இடையில் நிகழ்ந்த முதல் சந்திப்பு வரலாற்று சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது.

Share This Post

Post Comment