இந்தியா-மலேசியா இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆனது

India-and-Malaysia-ink-seven-pacts-including-an-air-servicesமலேசிய பிரதமர் நஜீப் ரசாக் 6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். கடந்த 30-ம் தேதி இந்தியா வந்து சேர்ந்த அவர் தனது முதல் பயணமாக சென்னைக்கு வந்தார். சென்னையில் மலேசிய மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், நடிகர் ரஜினி காந்த்தை சந்தித்தார்.

இன்று புதுடெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமது அன்சாரி ஆகியோரை சந்தித்து பேசினார். பின்னர், பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்தார். அப்போது மலேசியா-இந்தியா இடையிலான உறவுகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து இரு நாட்டு பிரதமர்கள் முன்னிலையில், விமான சேவை ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அப்போது பேசிய பிரதமர் மோடி, பொருளாதார மேம்பாட்டை வெற்றிகரமாக இணைந்து உருவாக்குவோம் என்று குறிப்பிட்டார். உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் இணைந்து செயல்படுவதாகவும், இரு நாடுகளுக்கிடையே உணவு பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் மோடி குறிப்பிட்டார்.

Share This Post

Post Comment