டெங்கு காய்ச்சல் குணமடைந்து பிரியங்கா டிஸ்சார்ஜ்

ekuruvi-aiya8-X3

Priyanka-Gandhi-நாட்டின் தலைநகரான டெல்லியில் மலேரியா, சிக்குன் குன்யா மற்றும் டெங்கு ஆகியவை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, இந்த மாதத்தின் முதல் 20 நாட்களில் மட்டும் 150-க்கும் அதிகமானவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 19-ம் தேதி நிலவரப்படி 657 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகளான பிரியங்கா காந்தி, காய்ச்சலுடன் கடந்த 23-ம்தேதி டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், டெங்கு காய்ச்சல் குணமடைந்து பிரியங்கா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ’’டெங்கு காய்ச்சலுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை நல்ல பலனை தந்துள்ளது. எனவே, பிரியங்கா வதேரா முற்றிலும் குணமடைந்து விட்டார். இன்று மாலை 4 மணிக்கு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சில நாட்கள் வீட்டில் ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளோம். அவசியம் ஏற்பட்டால் மட்டும் வெளியே செல்லும்படி கூறியுள்ளோம்’’ என தெரிவித்துள்ளனர்.

Share This Post

Post Comment