பூமியில் திடீரென ஏற்பட்ட பிளவில் கட்டிடங்கள் புதைந்தன

ekuruvi-aiya8-X3

Two-houses-got-swallowed-by-a-sinkholeஅமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள புளோரிடா மாநிலத்தில் பூமியில் ஏற்பட்ட பிளவில் இரண்டு கட்டிடங்கள் பூமியில் புதைந்துள்ளது. திடீரென பூமியில் ஏற்பட்ட பிளவு கட்டிடங்களை முழுமையாக பூமியினுள் புதைத்தைத் தொடர்ந்து அருகாமையில் உள்ள வீடுகளில் வசிப்போர் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

சிறியதாக ஏற்பட்ட பிளவு சிறிது நேரத்தில் பெரியதானதால் இரண்டு கட்டிடங்கள் பூமிக்கடியில் செல்ல காரணமாகி விட்டதாக கூறப்படும் நிலையில், தற்சமயம் பூமியில் ஏற்பட்ட பிளவு நின்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இரு கட்டிடங்களை முழுமையாக அழித்துள்ள பிளவு முழுக்க கழிவு நீர் சூழ்ந்துள்ளது.

அருகில் உள்ள ஏரி வரை இந்த பாதிப்பு நீளும் என்ற அபயாம் ஏற்பட்டுள்ளது. பிளவு நின்றிருப்பதைத் தொடர்ந்து அப்பகுதியில் மீட்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் ஏற்பட்ட பகுதிவாசிகள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டதோடு, அப்பகுதியில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share This Post

Post Comment