யோஷித்த தொடர்பில் கடற்படை தளபதிக்கு வழங்கப்பட்ட விசாரணை அறிக்கை ஆராய்வு

yosiththaயோஷித்த ராஜபக்ஷ தொடர்பில் கடற்படை தளபதிக்கு வழங்கப்பட்ட விசாரணை அறிக்கை ஆராயப்பட்டு அந்த விடயத்தின் எதிர்கால நடவடிக்கைகளை வெளியிடுவோம் எனத் தெரிவித்த பாதுகாப்பு ஊடகப் பேச்சாளர் பரிகேயர் ஜயநாத் ஜயவீர, இது தொடர்பில் கடற்படை தளபதியை சந்திக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அந்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பரிகேடியர் ஜயவீர இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் தனது கேள்வியில் யோஷித ராஜபக்ஷ கடற்படையில் அதிகாரியாக சேவையாற்றுகையில் கடற்படை சட்டங்களை மீறி செயற்பட்டதாகவும், பயிற்சிகள் உட்பட பல விடயங்கள் தொடர்பில் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதனை விவாதிப்பதற்காக விசேட குழு அமைக்கப்பட்டதோடு, யோஷித்த கடற்படையிலிருந்து இடைநிறுத்தப்பட்டார்.

இந்நிலையில் இது தொடர்பான அறிக்கை கடற்படை தளபதிக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் யோஷித்த மனித உரிமைகளை மீறியுள்ளார் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. இது தொடர்பில் எதிர்காலத்தில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப் போகின்றீர்கள் என்றும் கேள்வியெழுப்பினர்.

இதற்குப் பதிலளிக்கையிலேயே பாதுகாப்பு தரப்பு ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ஜலாத் ஜயவீர, இந்த விடயம் தொடர்பில் தனக்கு எதுவும் இதுவரையில் அறிவிக்கப்படவில்லையெனவும், எதிர்வரும் நாட்களில் கடற்படை தளபதியை சந்தித்து இது தொடர்பில் கேட்டறிந்து தகவல்களை ஊடகங்களுக்கு தெரிவிப்பதாகவும் அறிவித்தார்.


Related News

 • பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு ஆதரவான மனுக்களும் விசாரணைக்கு
 • அனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன் – ரணில்
 • நம்பிக்கைக்குரிய தலைவர் மஹிந்த மட்டுமே
 • இலங்கையில் எந்த அரசு அமைந்தாலும் தமிழர்களுக்கு பாதுகாப்பு கிடையாது
 • பரந்த கூட்டணியொன்றை உருவாக்கி களமிறங்குவோம் – நாமல்
 • மஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்தார்
 • இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவர்
 • ஜனநாயக விரோதமான செயலை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *