வெள்ளை வான் கடத்தல், படு கொலைகளை செய்தது எமது கட்சியினரே! ஈபிடிபி சதா

sathaயாழ்.குடாநாட்டினில் நடைபெற்ற வெள்ளை வான் கடத்தல்கள், கொலைகளின் பின்னணியில் இராணுவப்புலனாய்வுடன் இணைந்து ஈபிடிபி செயற்பட்டதாக அக்கட்சியின் மூத்த உறுப்பினரான சதா என்பவர் அம்பலப்படுத்தியுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தினில் இன்று திங்கட்கிழமை அவர் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டினில் மேலும் தெரிவிக்கையில் ஈபிடிபியின் தென்மராட்சி அமைப்பாளரான சாள்ஸ் எனப்படும் சூசைமுத்து அலெக்சாண்டரே வெள்ளை வான் கொலைகள், கடத்தல்களை இராணுவ புலனாய்வு பிரிவுடன் இணைந்து மேற்கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை,உதயன் அலுவலக தாக்குதல் படுகொலை, ரமேஸ் எனப்படும் அற்புதானந்தன் படுகொலை, அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜா படுகொலையென பல டக்ளஸின் அறிவுறுத்தலில் அரங்கேற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.உத்தரவு பிரகாரம் கொலைகளை அரங்கேற்றியவர்கள் இப்போதும் ஈபிடிபியிலிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கட்சியில் பல உட்கட்சிப்படுகொலைகள் நடந்ததாகவும் கொல்லப்பட்டவர்கள் அலுவலக வளவில் புதைக்கப்பட்டிருக்கலாமெனவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளர்.

Share This Post

Post Comment