கடத்தல் நாடகமாடிய வர்த்தகர் கைது!!

Facebook Cover V02

businessman-goes-300x200கடந்த ஞாயிற்றுக் கிழமை திருகோணமலையில் வைத்து காணாமல் போனதாக கூறப்படும் வர்த்தகர் மொஹமட் நஸ்ரின் நேற்று காலை ஹல்துமுல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை ஸ்ரீ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வர்த்தகர் ஹல்துமுல்ல பிரதேசத்திற்கு பஸ்ஸில் பயணிப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலில் அடிப்படையில் பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொஹமட் நஸ்ரின் கடன் தொல்லைகளிலிருந்து தப்பிப்பதற்காக தலைமறைவாகியிருந்துள்ளார் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குறித்த சந்தேகநபர் திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம், வவுனியா, கொழும்பு, கொழும்பிலிருந்து பதுளைக்கு செல்வதற்காக ஹல்தும்முல்லைக்கு செல்லும் போதே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவரை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை தங்க நகை ஏல விற்பனைக்காக ஒரு கோடியை கொண்டு சென்றதாக அவரது தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். எனினும் அவர் 50,000 பணத்துடன், பிஸ்கட் பக்கட் ஒன்றை வாங்கி தனது பையில் கொண்டு சென்றமைக்கான சாட்சிகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் காணாமல் போயுள்ளார் என்று கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய இவரை கண்டுபிடிப்பதற்கு 5 பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டதுடன், இவர் யாழ்ப்பாணத்தில் உள்ளார் என்று ஒரு ஜோதிடர் கணித்துக் கூறியதாக சிங்கள ஊடகம் ஒன்று நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.

கடன் தொல்லையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக தன்னைக் கடத்திவிட்டதாக வெளி உலகத்திற்கு தெரிவிப்பதற்காகவே இவர் தலைமறைவாகி இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share This Post

Post Comment