ராமேஸ்வரம் மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்த இந்திய கடலோரக் காவல்படை!

Facebook Cover V02

IMG-20171114ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என இந்திய கடலோர காவல்படையினர் அறிக்கை வெளியிட்ட நிலையில், நடந்த சம்பவத்துக்கு மீனவர் சங்க பிரதிநிதிகளிடம் மண்டபம் கடலோரக் காவல்படையினர் இன்று வருத்தம் தெரிவித்தனர்.

கடந்த திங்கள்கிழமை காலை மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடலோரக் காவல்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன், பல மணிநேரம் படகில் வைத்து தாக்கியதாகவும் புகார் எழுந்தது. இதில் காயமடைந்த மீனவர்கள் பிச்சை, ஜான்சன் ஆகிய இருவரும் ராமேஸ்வரம் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு நேற்று காலை முதல் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படையினர் மட்டுமே, நமது மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி வந்தநிலையில், இந்திய கடலோரக் காவல்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

 இச்சம்பவத்துக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், மீனவர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சென்னை கடலோரக் காவல்படைத் தலைமையகத்திலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் மீனவர்கள் மீது தாங்கள் துப்பாக்கிச்சூடு நடத்தவோ அவர்களைத் தாக்கவோ இல்லை என மறுப்பு தெரிவித்திருந்தனர்.

Share This Post

Post Comment