கடலினுள் தொலைந்து போகும் தீவுகள் குறித்து புதிய ஆதாரம்

ekuruvi-aiya8-X3

solomon_islands__512x288கடல் மட்டம் உயர்வடைவதால் தாழ்வான தீவுகள் தொலைந்து பேவதை நிருபிக்கும் முதல் அறிவியல் ஆதாரத்தை தாம் வெளியிட்டுள்ளதாக ஆஸ்திரேலியாவில் உள்ள ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு உலக வெப்பமயமாதலே காரணம் என அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தென் பசுபிக் கடலில் உள்ள சாலமன் தீவுகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தது ஐந்து பவளப்பாறை கூட்டங்கள் கடலில் மூழ்கியுள்ளதாக அறிவியல் சஞ்சிகை ஒன்றில் வெயிடப்பட்டுள்ள அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

மேலும் ஆறு தீவுகள் மிகமோசமான கடலரிப்பிற்கு உள்ளாகியுள்ளதுடன் அவற்றில் ஒன்றில் உயிர்வாழ்வதற்கு ஏற்ற பகுதியில் அரைவாசிக்கும் அதிகமான இடம் அழிந்துவிட்டதாகவும் தெரிவிக்கும் அந்த ஆய்வு அதிலிருந்த வீடுகள் கடலினுள் மூழ்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.

ஆறு தீவுகள் மிகமோசமான கடலரிப்பிற்கு உள்ளாகியுள்ளன எனவும் அந்த ஆய்வு கூறுகிறது.

Share This Post

Post Comment