கச்சத்தீவில் கடற்படை முகாம் அமைக்கப்படுவதாக வெளியான தகவலை மறுக்கிறது கடற்படை

ekuruvi-aiya8-X3

Kachchativகச்சத்தீவில் இலங்கைக் கடற்படை முகாம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியை கடற்படை ஊடகப் பேச்சாளர் அக்ரம் அலவி மறுத்துள்ளார்.

கச்சத்தீவில் இலங்கைக் கடற்படை முகாம் அமைக்க இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், இது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு இந்திய மத்திய அரசு கொழும்பில் உள்ள இந்தியத் தூதரை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் இந்திய செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கடற்படை ஊடகப் பேச்சாளரிடம் வினவிய போது,

யாழ் ஆயரின் வேண்டுகோளின்படி கிறிஸ்தவ விவகார அமைச்சின் நிதியுதவியுடன் தேவாலயம் ஒன்றே நிர்மாணிக்கப்படுகிறது என்றும், கடற்படை முகாம்கள் எதுவும் அங்கு அமைக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்

Share This Post

Post Comment