இந்திரா மராத்தான் போட்டி- ஜோதி மற்றும் ராஷ்பல் வெற்றி

ekuruvi-aiya8-X3

indira_maaratanஉத்தர பிரதேசத்தின் அலகாபாத் நகரில் ஆனந்த் பவன் பகுதியில் இருந்து அனைத்திந்திய இந்திரா மராத்தான் போட்டி இன்று காலை தொடங்கியது சர்வதேச தடகள வீரர் பிரமோத் குமார் திவாரி இதனை கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.

இந்த போட்டியில் பங்கேற்க 15 ஆயிரம் பதிவு செய்துள்ளனர். போட்டி 42 கி.மீட்டர் தொலைவு கொண்டது. இதில் பெண்கள் பிரிவில் மகாராஷ்டிராவை சேர்ந்த ஜோதி சங்கர் கவாதே வெற்றி பெற்றுள்ளார். இது அவரது 5வது வெற்றியாகும். 2வது இடம் ஹத்ராஸ் நகரின் அனிதா சவுத்ரிக்கும் மற்றும் 3வது இடம் வாரணாசியை சேர்ந்த ராணி யாதவுக்கும் கிடைத்தது.

ஆண்கள் பிரிவில் இந்திய ராணுவத்தின் ராஷ்பல் சிங் வெற்றி பெற்றுள்ளார். 2வது மற்றும் 3வது இடங்களை இந்திய ராணுவத்தின் அனில் குமார் மற்றும் ஆனந்த் சிங் முறையே பெற்றுள்ளனர்.

இரு பிரிவுகளிலும் முதல் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.2 லட்சம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். 2வது இடத்திற்கு ரூ.1 லட்சம் மற்றும் 3வது இடத்திற்கு ரூ.75 ஆயிரமும் பரிசு தொகை வழங்கப்படும்.

Share This Post

Post Comment