இறுதி யுத்தம் தொடர்பாக பொன்சேகா கூறியது அனைத்தும் பொய்!

sritharanஇறுதி யுத்­தத்­தின்­போது கொல்­லப்­பட்ட மக்கள், காணாமல் போனோர் மற்றும் சர­ண­டைந்­த­வர்கள் தொடர்­பான உண்­மை­யான விப­ரங்­களைப் பெறு­வ­தற்கு வடக்கு, கிழக்கு மாகாண அர­சாங்­கங்­களும் யாழ்ப்­பாணம் மற்றும் கிழக்கு பல்­க­லைக்­க­ழ­கமும் இணைந்து செய­லாற்ற வேண்டும் என தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­ஞானம் சிறி­தரன் கோரிக்கை விடுத்­துள்ளார்sritharan mp 59696e

ஸ்ரீலங்காவின் முன்னாள் இரா­ணுவத் தள­ப­தியும் பிராந்­திய அபி­வி­ருத்தி அமைச்­ச­ரு­மான சரத் பொன்­சேகா இறுதி யுத்­தத்­தின்­போது வெள்­ளைக்­கொடி விவ­கா­ரங்கள் தொடர்பில் பாரா­ளு­மன்­றத்­திலும் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பிலும் பல்­வே­று­பட்ட கருத்­துக்­களை வெளி­யிட்­டுள்ளார்.

இது தொடர்பில் கேட்­ட­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,

இறுதி யுத்­தத்தில் என்ன நடந்­தது, எத்­த­கைய உயி­ரி­ழப்­புக்கள் ஏற்­பட்­டன என்­பன தொடர்பில் இது­வரை உறு­தி­யான தக­வல்கள், ஆவ­ணங்கள் இல்லை. பல விசா­ர­ணைகள் மூலம் ஒரு இலட்­சத்­திற்கு மேற்­பட்­ட­வர்கள் கொல்­லப்­பட்டும் காணாமல்போயும் உள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இத்­த­கைய சூழலில் முன்னாள் இரா­ணுவத் தள­பதி குறை­வான உயி­ரி­ழப்­புக்­களே ஏற்­பட்­டது எனவும் கொல்­லப்­பட்ட விடு­தலைப் புலி உறுப்­பி­னர்­க­ளது சட­லங்­க­ளுக்கு புலிக்கொடி போர்த்தி இறுதி அஞ்­சலி செலுத்­தி­ய­தா­கவும் உண்­மைக்குப் புறம்­பான பல கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்தி வரு­கிறார்.

இறுதி யுத்தம் தொடர்பில் சனல் — 4 தொலைக்­காட்சி வெளி­யிட்ட வீடியோவில் கொல்­லப்­பட்ட விடு­தலைப் புலி உறுப்­பி­னர்­க­ளது சட­லங்கள் உள்­ளா­டை­யுடன் சேத­மாக்­கப்­பட்ட உடல்­க­ளு­மாக காட்­டப்­படும் படங்கள், வீடியோ கோப்­புக்கள் என்­பன இரா­ணு­வத்­தி­ன­ரா­லேயே எடுக்­கப்­பட்­டது என்­பது தெட்டத் தெளி­வான உண்மை. ஆகவே பொன்­சே­காவின் கூற்றை ஏற்றுக் கொள்­ள­மு­டி­யாது.

இறுதி யுத்­தத்­தின்­போது ஏற்­பட்ட மக்­களின் உயி­ரி­ழப்பு விப­ரங்­களில் குறிப்­பாக கொல்­லப்­பட்ட மக்­களின் விப­ரங்கள், காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் விப­ரங்கள், சர­ண­டைந்­த­வர்கள், அங்­க­வீ­ன­மா­ன­வர்கள், கண­வனை, மனை­வியை இழந்­த­வர்கள், பெற்­றோரை இழந்­த­வர்கள், மக்­களின் சொத்து விப­ரங்கள் போன்­றவை தொடர்­பான முழு விப­ரங்கள் உண்மைத் தன்­மை­யுடன் சேக­ரிக்­கப்­பட வேண்டும்.

இத்­த­கைய உண்­மைத்­தன்­மை­யு­டைய சேக­ரிப்பை வடக்கு, கிழக்கு மாகாண அர­சாங்­கமும் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்கள் என்பன ஆய்வுகள் மூலம் தரவைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இத்தகைய விபரங்களைப் பெறுவதற்கு ஏற்கனவே வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் கலந்துரையாடியுள்ளேன் எனவும் தெரிவித்தார்.


Related News

 • எந்தவொரு சூழ்நிலையிலும் பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதில்லை
 • ராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்
 • ராஜபக்சேவுக்கு பெரும் தோல்வி – நாடாளுமன்றத்தில் கடும் அமளி
 • பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவிப்பு
 • டில்ஷான் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்தார்
 • புதிய பிரதமருக்கு எதிராக 122 உறுப்பினர்கள் ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு
 • பாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்தி வைப்பு
 • ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *