சூர்யா, கார்த்தியை தொடர்ந்து ஜோதிகாவை இயக்கும் பிரபல இயக்குனர்

Facebook Cover V02

jomani._L_sபல வெற்றிப்படங்களை இயக்கி சிறந்த இயக்குனர் என்று பெயர் பெற்றவர் மணிரத்னம். இவர் இயக்கிய ‘மௌனராகம்’, ‘நாயகன்’, ‘அக்னி நட்சத்திரம்’, ‘தளபதி’, ‘ரோஜா’ உள்ளிட்ட பல படங்கள் மக்கள் மனதில் இன்னும் நீங்காமல் இருக்கிறது. இவர் சூர்யாவை வைத்து ‘ஆயுத எழுத்து’ என்ற படத்தை இயக்கினார்.

சமீபத்தில் கார்த்தியை வைத்து ‘காற்று வெளியிடை’ என்ற படத்தை இயக்கினார். தற்போது ஜோதிகாவை வைத்து படம் இயக்க இருக்கிறார் மணிரத்னம். இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் பற்றிய முழுவிவரங்கள் வெளியாக இருக்கிறது.

திருமணத்திற்கு பிறகு ஜோதிகா படங்களில் நடிக்காமல் இருந்தார். பின்னர் ‘36 வயதினிலே’ படம் மூலம் மறுபடியும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மகளிர் மட்டும்’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. மேலும் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ‘நாச்சியார்’ படத்திலும் ஜோதிகா நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

Share This Post

Post Comment