ஓக்ரோபர் 22ல் வாக்களியுங்கள், உங்களுக்கு பணியாற்றக்கூடிய தலைமைக்கு : ஜோன் ரோறி

கடந்த நான்கு வருடங்களாக  நகர முதல்வர் என்ற வகையில் தமிழ்ச் சமூகத்தினை நான் நன்கு அறிந்து கொண்டுள்ளேன். தாயக போரினை நினைவு கூரும் முகமாக நடைபெற்ற பல நிகழ்வுகளிலும், சமூக நிகழ்வுகளின்  விழாக்களிலும், கொண்டாட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றமைக்காக கவுன்சிலர் நீதன் சண்(ற்கும் ), பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரிக்கும் எனது நன்றியறிதலைத் தெரிவிக்கின்றேன்.

நகரத்தில் வசிக்கும் தமிழ் சமூகம் எங்கிருந்து  வந்தவர்கள் என்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள நான் விரும்பினேன். ஏன் நீங்கள் ஸ்ரீலங்காவை விட்டு வெளியேறினீர்கள்  நீதிக்கும் ஆற்றுப்படுத்தலுக்குமான விடயத்தில் ஸ்ரீலங்காவின் பாதை எவ்வாறு உள்ளது எனவும் அறிய விரும்பி, கடந்த வருடம் ஸ்ரீலங்காவின் வடபகுதிக்கு நான் சென்று வந்தேன்.

IMG_4133கொடுமையான அட்டூழியங்கள் நடைபெற்ற இடங்களில் நான் நின்றபோதும், தற்பொழுது இராணுவத்தினரின் வசம் உள்ள காணிகளைப் பார்த்தபோதும், காணாமற்போன பிள்ளைகளின் தாய்மாரினைச் சந்தித்த காரணத்தினாலும், ரொறன்ரோவிலுள்ள தமிழ்ச் சமூகம் தமது குடும்பங்கள் மீது கொண்டுள்ள உள்ளார்ந்த ஈடுபாடு, மன உறுதி முனைப்பான ஊக்கம், ஆர்வம் பற்றிய கூடுதலான புரிந்துணர்வை ஏற்படுத்த எனக்கு உதவியாக அமைந்தது.

நீதிக்கும் ஆற்றுப்படுத்தலுக்குமான தேடலில் ஒரு சிறிய பங்கினை வகிக்கும் முகமாக. ரொறன்ரோவிற்கும் யாழ்ப்பாணத்திற்குமிடையில் நாம்  புரிந்துணர்வு  ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திட்டமையின்  மூலமாக கல்வியிலிருந்து, பொருளாதார அபிவிருத்தி வரையுள்ள எல்லா விடயங்களிலும் ஒருமித்து வேலை செய்வதுடன் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த யாழப்பாண நூலகத்தினைப் புதுப்பிப்பதற்குமான ஒருமித்த வேலைத்திட்டமொன்றிற்காகக் கைச்சாத்திட்டிள்ளோம்.

நான் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்வது யாதெனில்,  நான் நகர முதல்வராக இருக்கும் வரை தமிழ்ச் சமூகத்திற்கும்,  புரிந்துணர்வு  ஒப்பந்தத்திற்கும் முழு ஈடுபாடு கொண்டவனாக இருப்பேன்.

இந்த மாதம் ஒக்ரோபர் 22 ல் இந்நகரத்தில் நடைபெறவிருக்கும் தேர்தலானது தமிழச் சமூகம் உட்பட எல்லோருக்கும் அக்கறையுள்ளதாக அமையும்.

இந்நகரிற்கு தலைமை வகிப்பதற்கு எனக்கு ஆவல் இருக்கிறது. சில வருடங்களிற்கு முன் ரொறன்ரோ இருந்ததினை விட இப்பொழுது சிறப்பாக உள்ளது. இந்த முன்னேற்றத்தினை நாம் தொடர வேண்டும்.

போக்குவரத்துச் சேவைகளை கட்டியெழுப்புகின்றோம். வரிகளைக் குறைவாக வைத்திருக்கின்றோம். ஏனைய மட்டங்களிலுள்ள அரசாங்கங்களுடனும் சேர்ந்து இதற்காகப் பணியாற்றி வருகின்றோம்.

Smart Track, Relief Line>  ஸ்காபறோ நிலக்கீழ் தொடருந்து நீடிப்பு போன்ற போக்குவரத்துத் திட்டங்களை போன்று பலதரப்பட்ட செயற்திட்டங்கள் ஒரே நேரத்தில் முன்னோக்கி எடுத்துச் செல்லப்படுகின்றன. இதற்காக முதன்முதலில் கவுன்சிலினால்  அங்கீகரிக்கப்பட்ட போக்குவரத்துத் திட்டம் முன்னோக்கி நகர்த்திச் செல்லப்படுகின்றது. இதற்கு ஒவ்வொரு மட்டத்திலுமுள்ள அரசுகளிலிருந்து நிதி உதவி ஒதுக்கப்படுகின்றது. மண் வாரும் வேலை  நிலத்தில் (தரையில்) தற்பொழுது நடக்கின்றது.

இந்தத்  தேர்தலில் களமிறங்கியுள்ள சில வேட்பாளர்கள் போக்குவரத்துத் திட்டத்தை மீண்டும் ஆரம்பத்திலிருந்தே தொடங்கி, மீண்டும் விவாதத்திற்குள்ளாக்கி போக்குவரத்துத் திட்டத்தினை மீளவும் வரைந்து, வரைபடப் பலகைக்கு  மீண்டும் செல்வது என்பது எதுவும் கட்டமைப்பாக்கப்படாது போகும் ஒரு நிலைக்குச் செல்லும். நான் போக்குவரத்தினை கட்டமைக்கப்படுவதற்காக தயார் நிலையில் உள்ளேன்.

அத்துடன் நான் நினைக்கின்றேன்  நகரத்திலுள்ள மூத்தோர், குடும்பங்கள் மற்றும் இளைஞர்களுக்கும் வாழ்க்க்கை கட்டுபடியானதாகவும் அமையக்கூடியதனை உறுதி செய்யும் பொறுப்பு நகர அரசாங்கத்திற்கு உண்டு.

அதனால்தான் கடமையில் இருக்கும் ஒவ்வொரு வருடமும் ஆதனவரியைக் குறைவாக வைத்திருக்கும் பணியினை எனது சாதனையாகப் பெருமை கொள்கின்றேன்  மீண்டும் தெரிவு செய்யப்படுமிடத்து இதனை நான் தொடரவுள்ளேன்.

மேலும் எல்லோரும் வாழக்கூடியவகையில் கட்டுபடியானதாக அமையும் பொருட்டு நாம் மேலும் சில முதலீட்டுத் திட்டங்களை மக்களுக்காக ஆக்கியுள்ளோம்.அதில் இளம்பராயப் பிள்ளைகளுக்காக TTC இ ல் கட்டணம் இன்றிய பயணம் , பிள்ளை பராமரிப்பு, மாணவர்களுக்குரிய சத்துணவு, ஒரு குறிப்பிட்ட நேர ( கால) இடைவெளியில் இறங்குவதும், ஏறுவதுமாக எந்த ஒரு TTC பொதுப்போக்குவரத்தினையும் பயன்படுத்தும் திட்டம் போன்றவை அடங்கும்.

நான்கு வருடங்களிற்கு முன்பு, நன்கு பணிபுரியக்கூடிய ஒரு தலைமைத்துவம் ரொறன்ரோவிற்குத் தேவைப்பட்டது. அதனால் தான் நீங்கள் என்னைத் தெரிவு செய்தீர்கள்.

நான் நம்புகின்றேன் இந்தத் தேர்தலிலே,வாக்காளர்களுக்குரிய ஒரு பெரும் கேள்வியாக இருக்கக்கூடிய ஒரு விடயம் என்னவெனில், யஸ்ட்ரின் ரூடோ பிரதமராக உள்ள சமஸ்டி அரசுடனும், ஃபோட்  முதல்வராக உள்ள மாகாண அரசுடனும் சேர்ந்து இயங்குவதற்கு  யார் மிகவும் சிறந்தவர், பொருத்தமானவர் என்பதாக  உள்ளது?

சில நேரங்களில் சேர்ந்து  வேலை  செய்வதென்பது எவ்வளவு  கடினமாக இருந்தாலும், அமைந்தாலும் அரசாங்கங்களுடன் ஒன்று சேர்ந்து வேலை செய்வதற்குரிய வழிகளை எப்பொழுதுமே கண்டு கொள்வேன். இந்த நகரத்தின் மக்கள் ஒரு மாநகர முதல்வரிடம் இதையே எதிர்பார்ப்பார்கள், அதைத்தான் நான் இதுவரை செய்தேன் . அதையே நான் தொடர்ந்தும் செய்வேன்.

ஏனென்றால், ரொறன்ரோ போன்ற ஒரு நகரத்திற்குத் தேவைப்படும் தலைமைத்துவமானது உங்களுக்கும, குடும்பங்களிற்கும், எமக்கெல்லோருக்கும் வினைத்திறனுடன் பணியாற்றும் தகைமை உள்ள ஒருவர் தான்.IMG_4090 IMG_4055 IMG_4053 IMG_4042 IMG_4008

 

 

 

 

 

 

 

 

 

 


Related News

 • அதிகார போதையில் தடுமாறும் மைத்திரி!
 • விக்னேஸ்வரனும் நவக்கிரகங்களும்
 • நான்கு தமிழர்கள் டொரோண்டோ ,மார்க்கம் கல்விச்சபைகளில் வெற்றி
 • உளுக்கு, சுளுக்கு, வாதம்
 • களைகட்டும் தேர்தல் திருவிழா
 • தேர்தல் உள்ளே வெளியே …..
 • நீதனின் வெற்றி (கேள்வி குறியில் ) யார் கையில் ?
 • ஓக்ரோபர் 22ல் வாக்களியுங்கள், உங்களுக்கு பணியாற்றக்கூடிய தலைமைக்கு : ஜோன் ரோறி
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *