சோக்சியிடம் ஜெட்லி மகள் பணம் பெற்றார்- ராகுல் குற்றச்சாட்டு

பண மோசடி வழக்கில் வெளிநாடு தப்பிச் சென்ற தொழிலதிபர் சோக்சியிடம், ஜெட்லி மகள் பணம் பெற்றார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து ராகுல் நேற்று கூறியதாவது:

பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் மோசடி செய்து, வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற, தொழிலதிபர் மெஹுல் சோக்சியிடம் இருந்து, பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் மகள் சோனாலி, பல கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளார். ஊடகங்கள் மிரட்டப்பட்டு உள்ளதால், இது குறித்து செய்தி வெளியிட தயங்குகின்றன. இவ்வாறு கூறினார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ், தலைவர் சச்சின் பைலட் தெரிவிக்கையில், ‘நிரவ் மோடி நிறுவனத்திற்கு சட்ட ஆலோசகர்களாக இருந்த தனது மகளையும், மருமகனையும் கடன் மோசடி வழக்கு விசாரணையிலிருந்து மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காப்பாற்றியுள்ளார்; தனது பதவியை தவறாக பயன்படுத்திய ஜெட்லியை பதவியிலிருந்து நீக்க வேண்டும்’ எனக் கூறினார்.


Related News

 • அரசு முறை பயணமாக வியட்நாம் செல்கிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
 • தமிழகத்தை நெருங்கும் கஜா புயல் இன்று இரவு முதல் மழை பெய்யும்
 • அய்யப்பன் ஆசிர்வாதமே காரணம் – சபரிமலை தந்திரி
 • நாடு மக்களால் நடத்தப்படுகிறது; ஒரு மனிதரால் அல்ல என்பது கூட பிரதமர் மோடிக்கு தெரியாது – ராகுல் காந்தி
 • சபரிமலை வழக்கை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு
 • அலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை
 • கஜா புயல் – 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
 • சத்தீஷ்கார் சட்டசபை தேர்தல் – மதியம் 2 மணிவரை 37.61 சதவீத வாக்குகள் பதிவு
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *