டெல்லி விமான நிலையத்தில் ஜெட் ஏர்வேஸ் விமானம் நின்றிருந்த வாகனத்தின் மீது மோதியது

ekuruvi-aiya8-X3

jetairways-09டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3வது முனையத்திற்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று துபாயில் இருந்து நேற்றிரவு 8 மணியளவில் வந்து இறங்கியது.  அதில் 8 விமானிகள் மற்றும் 125 பயணிகள் இருந்தனர்.

அது தனது இடத்தில் நிற்பதற்காக சென்றபொழுது அதன் வலதுபுற இறக்கை அதே முனையத்தில் அருகில் நின்றிருந்த வாகனம் ஒன்றின் மீது மோதியது.

இதுபற்றி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தினை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, விமானிகள் மற்றும் பயணிகள் என அனைவரும் விமானத்தில் இருந்து பாதுகாப்புடன் வெளியேறினர்.  பி737 விமானம் ஆனது விமான நிறுவன தொழில்நுட்ப குழுவால் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது என கூறினார்.

இந்த விவகாரம் பற்றி ஆய்வு செய்யப்பட்டு அதிகாரிகளுக்கு அறிக்கை அளிக்கப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Share This Post

Post Comment