இஸ்ரேல் தலைநகராக ஜெருசலம்

Thermo-Care-Heating

erusalamஜெருசலம் நகரை, இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதன் முதல் கட்டமாக, அங்கு அமெரிக்க தூதரகத்தை அமைக்கவும் அவர் முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க அதிபர்,

இது தொடர்பான இறுதி முடிவு மத்திய கிழக்கு நாடுகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் அறிவிக்கப்படும்.

டெல் அவிவ் நகரில் உள்ள இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகத்தை, ஜெருசலம் நகருக்கு மாற்றுவதற்கான அறிவிப்பு 6 மாதத்தில் வெளியாகும்.

தூதரகத்தை மாற்ற 3 முதல் 4 வருடங்கள் ஆகும். தூதரகத்தை மாற்றுவதற்கான காலக்கெடு எதுவும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

தற்போது ஜெருசலமில் அமெரிக்காவுக்கு என சொந்தமாக எந்த கட்டடமும் இல்லாததால், இது தொடர்பாக பாலஸ்தீன அதிபர் மெக்மூத் அப்பாஸ், ஜோர்டான் அரசர் அப்துல்லா, எகிப்து அதிபர் அதேல் படாக் அல் சிசி, சவுதி அரசர் சல்மான் ஆகியோருடன் தூதரகம் மாற்றம் குறித்து பேசப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

ideal-image

Share This Post

Post Comment