கனேடிய தமிழர்களின் மிக பெரு அடையாளத்தை உருவாக்கிய ஜெகநாதன் மயில்வாகனம்.

ekuruvi-aiya8-X3

Pioneer in Hospitality Industry Award
Mr. Jeganathan Mylvaganam

திரு ஜெகநாதன் மயில்வாகனம்.  Scarborough Convention Centre  விருந்து
மண்டபத்தின் சொந்தக்காரர்.  இவரும் கீழிருந்து  இருந்து கோபுரத்துக்கு உயர்ந்தவர்.வெறுமனே புன்னகையோடு நின்றுவிடாமல் அவரது தொழில் வளர்ச்சி பற்றி வாய்ப்புக் கிடைக்கும் போது பேசிக்கொள்வேன். 42,000 சதுர அடியில் ஒரே நேரத்தில் 1,500 விருந்தினர்களுக்கு விருந்தோம்பல் செய்யக் கூடிய மண்டபம் இவருடையது.   இதில் சிறப்பு என்னவென்றால் இது ஒரு தனிமனித சாதனை.  கனேடிய தமிழர்களின் வாழ்கை தரம் உயரும் என்ற நம்பிக்கையில் உயர்வாக சிந்தனை செய்து முதலிட்டவர். கனேடிய தமிழர்களுக்கு Scarborough Convention Centre  ஒரு அடையாளமாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது . திரு ஜெகநாதனின் சாதனை பற்றி கனடிய தமிழ்ச் சமூகம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். இவருக்கான இகுருவி
Pioneer in Hospitaliity Industry Award  விருதை The Law Office of Meleni  சட்ட
நிறுவனம் அனுசரணை வழங்கியிருந்தது.


தேசங்கள் பல தாண்டி வாழ்வை வென்றுவிடும் கனவோடு கனடாவிற்கு புலம் பெயர்ந்த தமிழர்களின் பெருமை பேசும் அடையாளங்களில் ஒன்றான Scarborough Convention Centre ஐ தனிமனித முயற்சியால் உருவாக்கிய மனிதர்.

42,000 சதுர அடிப பரப்பில் 1500 விருந்தினர்களை ஒன்றாக அரவணைத்து விருந்தேம்பல் செய்யும் வல்லமை மிக்கதாய் தமிழரின் நிரவாகத்தில் நிமிர்ந்து நிற்கின்றது இவர் உருவாக்கிய Scarborough Convention Centre.

தமிழர்களின் உயர்வான விருந்தோம்பல் பண்பினை புலம் பெயர் தேசத்தில் அழுத்தமாய் பதிவு செய்யும் ஒரு குறியீடாக Scarborough Convention Centre விளங்குகின்றது.

மாறி வரும் உலகில் விருந்தோம்பல் துறையில் அடுத்தடுத்த பரிமாணங்களை எட்ட முடியும் என்று நம்பிக்கையோடு இவர் முன்னெடுத்த பயணம் இது.

இத்தனை பிரம்மாண்டமான விருந்தினர் மண்டபத்தை தனி ஒருவனால்  உருவாக்கிவிட முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர்.

இதன் மூலம் அவர் வழித்தடம்  பின்பற்றி புதிய தொழில் முனைவோர் பலர் இந்த துறையில் எழுந்து வருவதற்கும் வெற்றி பெறுவதற்கும் காரணமான முன்னோடி.

இளம் வயதில் குடும்பத்தின் பாரத்தை பிஞ்சுத் தோள்களில் தாங்கியதால் கிடைத்த பழுத்த அனுபவம் வாழ்வின் உயர்வு நோக்கிய பயணத்தை இவருக்கு பரிசளித்திருக்கின்றது.

அமெரிக்காவில் பத்திரிகை விற்கும் பெட்டிக் கடையில் தொடங்கிய வர்த்தக முயற்சி கனடாவில் தொடரூந்து நிலையங்களில் பத்திரிகைகளை விற்பனை செய்யும் நிலையங்கள் பலவற்றை கொள்வனவு செய்யும் அளவிற்கு பெருவளர்ச்சி கண்டதன் பின்னால் உள்ளது இவரின் அயராத உழைப்பும் திடமான நம்பிக்கையும்.

தனது வியாபார முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு ஏற்ற வகையில் தனது புதல்வர்களை தயார்ப்படுத்தியதன் மூலம் கடின உழைப்பினால் தான் உருவாக்கிய வர்த்தக சாமராஜ்ஜியம் கனேடிய மண்ணில் தொடர்ந்தும் நிலைத்திருக்கும் என்ற உறுதியை அவர் ஏற்படுத்தியிருக்கின்றார்.

இத்தனை பெருமைகளையும் தலையில் ஏற்றி சுமக்காமல் சிறு புன்னைகையோடு கடந்து செல்லும் ஆற்றல் மிக்க Scarborough Convention Centre இன் அதிபர் ஜெகன் அவர்கட்கு “ Pioneer in Hospitality Industry “ விருதினை  வழங்குவதில் பெருமை கொள்கிறது இகுருவி

The Law Office of Meleni David

ekuruvi_night 2018_rajah (347)-X3 ekuruvi_night 2018_rajah (348)-X3

ekuruvi night 2018
ekuruvi night 2018

ekuruvi_night 2018_rajah (354)-X3 ekuruvi_night 2018_rajah (355)-X3 ekuruvi_night 2018_rajah (357)-X3 ekuruvi_night 2018_rajah (416)-X3

ekuruvi night 2018
ekuruvi night 2018

ekuruvi aiya594-X2

Share This Post

Post Comment