ஜப்பானிலிருந்து ஜனாதிபதி நாடு திரும்பினார்

ekuruvi-aiya8-X3

maithiri24ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன நேற்று மாலை ஜப்பானிலிருந்து நாடு திரும்பியுள்ளார்.

ஜீ-7 பொருளாதார உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருந்த ஜனாதிபதிக்கு மாநாட்டின் போது அனைத்து நாடுகளின் தலைவர்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பும் மரியாதையும் கிடைத்திருந்தது.

அத்துடன் இலங்கையின் அபிவிருத்திகளுக்காக 38 மில்லியன் ஜப்பான் யென்களை நிதியுதவியாக ஜப்பானிய அரசாங்கம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பொருளாதார உச்சிமாநாட்டில் கலந்து கொண்டதன் மூலம் பாரிய பொருளாதார நன்மைகளைப் பெற்ற நிலையில் ஜனாதிபதி தனது விஜயத்தைப் பூர்த்தி செய்து கொண்டு நாடு திரும்பியுள்ளார்.

Share This Post

Post Comment