இத்­தா­லிய பொலி­ஸா­ரிடம் சிக்­கிய ஆப்கான் குடி­யேற்­ற­வாசி

showImageInStoryலொறி­யொன்றின் அடிப் பகு­ தியில் தோல் பட்­டி­களால் தன் னைத்தானே கட்டித் தொங் கிய­வாறு இத்­தா­லிக்குள் 250 மைல்கள் தூரம் பய­ணித்த ஆப்கான் குடியேற்­ற­வா­சி­யொ­ருவர் இத்­தா­லிய பொலி­ஸா­ரிடம் வச­மாகச் சிக்­கியுள்ளார்.

லொறியின் கீழ்ப் பகு­தியில் அபா­ய­க­ர­மான முறையில் தொங்­கி­ய­வாறு மேற்­படி குடி­யேற்­ற­வாசி பயணம் செய்­வதை அவ­தா­னித்த அவ்­வ­ழி­யாக சென்ற மோட்டார் வாகன சார­திகள் அது தொடர்பில் பொலி­ஸா­ருக்கு அறி­ வித்­துள்­ளனர்.

தென் இத்­தா­லி­யி­லுள்ள பிறின்­டிஸி நக ரில் வைத்து குறிப்­பிட்ட குடி­யேற்­ற­வாசி தோல் பட்­டி­களைப் பயன்­ப­டுத்தி அந்த லொறியில் தன்னைப் பிணைத்துக் கொண்­ட­தாக நம்­பப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில் அவர் நப்­ல­ஸுக்கும் ரோமிற் கும் இடையில் லாஸியோ பிராந்­தியத்­தி­ லுள்ள நெடுஞ்­சா­லையில் வைத்து பொலி­ ஸாரால் பிடிக்­கப்­பட்டார்.

துருக்­கி­யி­லி­ருந்து ஸ்பெயி­னுக்கு பய­ணத்தை மேற்­கொண்­டி­ருந்த அந்த லொறி யைச் செலுத்­திய பல்­கே­ரியாவைச் சேர்ந்த சார­தியும் துணைச் சாரதியும் தமது வாக­னத்தின் கீழ் குடி­யேற்­ற­வா­சி­யொ­ருவர் இரு தோல் பட்­டி­களின் துணை­யுடன் தொங்­கி­ய­வாறு பயணம் செய்­வதை அறி­யா­தி­ருந்­துள் ­ளனர்.

கடும் சோர்வால் பாதிக்­கப்­பட்­டி­ருந்த அந் தக் குடி­யேற்­ற­வாசி பின்னர் அரு­கி­லுள்ள மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்டார்.

தற்­போது அவ­ருக்கு இத்­தா­லியை விட்டு வெளி­யேற 7 நாள் கால அவ­காசம் வழங்கப்­ பட்­டுள்­ளது.

அதே­ச­மயம் குறிப்­பிட்ட பல்­கே­ரிய சார­தி­களுக்கு பய­ணத்தைத் தொடர அனு­ம­தி­ய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த வருட ஆரம்­பத்­தி­லி­ருந்து இத்­தா­லியை 100,000 க்கு மேற்­பட்ட குடியேற்ற வாசிகள் வந்தடைந்துள்ளனர்.


Related News

 • ஏமன் நாட்டில் நடந்த வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 149 பேர் பலி
 • பாகிஸ்தான் விமானம் தரை இறங்கும்போது விபத்து
 • கலிபோர்னியாவில் காட்டுத்தீ – பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்ததற்கு வன நிர்வாகம் மீது டிரம்ப் சாடல்
 • காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தாக்கி 200 பேர் சாவு
 • சோமாலியாவில் குண்டுவெடிப்பு; துப்பாக்கிச்சூடு – 20 பேர் கொன்று குவிப்பு
 • அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்தால் தஞ்சம் கோர முடியாது – டிரம்ப் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு
 • ஐரோப்பாவின் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைக்கு உதவ தயார் – டிரம்ப்
 • அமெரிக்க மாகாணத்தில் காட்டுத்தீ வேகமாக பரவுகிறது – ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *