நடிகர் சரத்குமார் வீட்டில் வருமானவரித் துறையினர் ஆய்வு

Facebook Cover V02

sarathkumar_07ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா நடந்தது தொடர்பாக காலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 30 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட 30 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் 10 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

பணப்பட்டுவாடா தொடர்பாக வருமான வரித்துறை நடத்தி வரும் இந்த சோதனை இரவு வரை தொடரும் என கூறப்படுகிறது.

Share This Post

Post Comment