இஸ்லாமியத் தீவிரவாதப் படைகளுக்கு சிரியாவில் பெரும் பின்னடைவு

ekuruvi-aiya8-X3

siriyaஇன்று ஞாயிற்றுக்கிழமை இஸ்லாமியத் தீவிரவாதப் படைகள் சிரியாவில் மிகப்பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன.

ரஸ்யாவின் உதவியுடன் சிரியப்படைகளும் போராளிகளும் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராக பல்மேரா நகரை மீளக்கைப்பற்றும் தாக்குதல் நடவடிக்கையை கடந்த சில நாட்களாக மேற்கொண்டிருந்தன. இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பல்மேரா நகரின் விமானத்தளம் உட்பட பெரும்பகுதியை மீட்புப்படைகள் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்ததோடு இஸ்லாமியத் தீவிரவாதிகளை வேறிடங்களுக்குப் பின்வாங்கச் செய்துள்ளன.

இஸ்லாமியத்தீவிரவாதிகளின் மிகப்பெரும் கோட்டையாகவும் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இந்த பல்மேரா நகரம் திகழ்ந்து வந்தது. இந்த மீட்பு நடவடிக்கையில் 400 வரையான இஸ்லாமியத் தீவிரவாதிகளும் 188 சிரியப் படையினர் மற்றும் போராளிகளும் இறந்துள்ளதாக சிரிய அரசதரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. 2013 இல் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பான ISIS தோற்றம்பெற்ற பின்னர் அவர்கள் சந்தித்த இரண்டாவது மிகப்பெரும் வீழ்ச்சி இதுவென ஆய்வாளர்கள் கணித்துள்ளார்கள்.

துருக்கியின் எல்லையிலுள்ள கொபாணி என்ற நகரைக் கைப்பற்ற இஸ்லாமியத் தீவிரவாதிகள் முயன்றமையும் அந்நகரைக் காக்க குர்திஸ் விடுதலை இயக்கம் மாதக்கணக்கில் கடுமையாகப் போராடி அந்நகரைக் காப்பாற்றியமையும் இஸ்லாமியத் தீவிரவாதிகள் எதிர்கொண்ட மிகப்பெரும் தோல்வியாக இன்றுவரை கணிக்கப்படுகின்றது.

Share This Post

Post Comment