பருத்தித்துறை இளைஞனின் இறுதிக்கிரியை: பாதுகாப்பு தீவிரம்

ekuruvi-aiya8-X3

imageedit_2_9791573852யாழ்.பருத்தித்துறை பகுதியில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் இறுதிக்கிரியை இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், அப் பகுதியில் ஏராளமாக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இளைஞனின் சொந்த இடமான துன்னாலையிலும், நெல்லியடி முதல் கொடிகாமல் அரசடி வீதிவரையும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறுதிக்கிரியைகள் நடைபெறும் இடத்தில் ஏராளமான இளைஞர்களும் பொதுமக்களும் குவிந்துள்ள நிலையில், அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் பருத்தித்துறை மணற்காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக மணலேற்றிச் சென்ற லொறி மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், துன்னாலையைச் சேர்ந்த யோகராசா தினேஸ் (வயது – 24) என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார். சமிக்ஞையை மீறிச் சென்றதனாலேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் கொதித்தெழுந்து பொலிஸ் காவலரணுக்கு சேதம் ஏற்படுத்தியதோடு, பல்வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஆராய பொலிஸ் விசேட குழுவொன்று பருத்தித்துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதோடு, பொலிஸ் அதிகாரிகள் இருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment