இறுதிக்கட்ட யுத்தம் : ஐ.நா தொடர்பான விமர்சனங்கள் நியாயமானவை

Facebook Cover V02

helanஇலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்ததில் ஸ்ரீலங்கா விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபை கையாண்ட விதம் குறித்து எழுந்த விமர்சனங்கள் நியாயபூர்வமான அமைந்ததாக ஐ.நா செயலாளர் நாயகம் பதவிக்கான முன்னணி வேட்பாளர் ஹெலன் கிளார்க் தெரிவித்துள்ளார்.

வன்முறைகள் தீவிரவாதம் மற்றும் சர்வதேச பாதுகாப்பின்மை போன்ற அடிப்படைக் காரணங்களுக்கு எதிராக போராடுவது போன்ற சிறப்பான பணிகளை ஐ.நா மேற்கொள்வது அவசியம் எனவும் ஹெலன் கிளார்க் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் தலைவராக தாம் பதவி வகித்த ஒரு மாதத்தின் பின்னர் ஸ்ரீலங்காவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் உத்தியோகபூர்வமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாகவும் ஹெலன் கிளார்க் கூறியுள்ளார்.

ஐ.நா சபைக்கான புதிய வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக ஐ.நா பாதுகாப்புச் சபையின் 15 உறுப்பு நாடுகள் மூன்று கட்ட வாக்கெடுப்பில் முதலாவது வாக்கெடுப்பு சில நாட்களில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், ஐ.நா செயலாளர் நாயகம் பதவிக்கான முன்னணி வேட்பாளர் ஹெலன் கிளார்க் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஹெலன் கிளார்க் கடந்த 2009 ஆம் ஆண்டில் இருந்து ஐ.நாவின் மிக முக்கியமான திணைக்களங்களில் ஒன்றான ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் தலைவராக பதவி வகித்து வருகின்றார்.

Share This Post

Post Comment