ஐரோப்பா செல்ல முயன்ற குடியேறிகள் 70 பேர் லிபியக் கடலில் ‘மூழ்கினர்’

sdsd

libya_migrants_512x288_bbc_nocreditஐரோப்பாவுக்கு படகு மூலம் செல்ல முயன்ற குடியேறிகளில் 70 பேர் வரையில் லிபியாவின் கரையை அண்டிய கடலில் மூழ்கியுள்ளதாக அஞ்சப்படுகின்றது.

லிபியாவின் சப்ராட்டா என்ற இடத்திலிருந்து 4-மைல் தூரத்தில் அவர்களின் காற்றடைக்கப்பட்ட டிங்கி படகு மூழ்கிய நிலையில், 26 பேரை மீட்கப்பட்டுள்ளதாக ரோம் நகரில் உள்ள கடலோரக் காவல்படையை மேற்கோள்காட்டி இத்தாலிய ஊடகங்கள் கூறுகின்றன.

100 பேர் சேர்ந்தவுடனேயே டிங்கி படகுகள் பயணத்தை துவங்குவது வழமை என்பதால், காப்பாற்றப்பட்டவர்கள் தவிர்ந்த 70 பேர் வரையில் மூழ்கி இறந்திருப்பார்கள் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

Share This Post

Post Comment