யாழ்ப்பாண மாநகரில் இரகசிய இடங்களில் சிசிரிவி கமராக்கள் – ஆணையாளர்

ekuruvi-aiya8-X3

vakeeshanயாழ்ப்­பாண மாந­க­ரப் பகு­தி­யில் திண்­மக் கழி­வு­க­ளைக் கொட்­டு­வோரை இனம் கண்­டு­கொள்­வ­தற்­கா­கக் கண்­கா­ணிப்­புக் கம­ராக்­கள் பொருத்­தும் பணி­கள் இடம்பெறுகின்றன. கண்காணிப்­புக் கம­ராக்­கள் பொருத்­தப்­ப­டும் இடங்­கள் தொடர்­பில் எந்­தத் தக­வலும் தெரி­யப்­ப­டுத்­தப்­ப­ட­மாட்­டாது” இவ்­வாறு யாழ்ப்­பாண மாந­கர ஆணை­யா­ளர் பொ. வாகீ­சன் தெரி­வித்­தார்.

“யாழ்ப்­பாண மாந­க­ரத்­தில் திண்­மக் கழி­வ­கற்­றும் நட­வ­டிக்­கை­கள் 90 வீதம் வெற்­றி­பெற்­றுள்­ளன. பெரும்­பா­லான குடி­யி­ருப்­பா­ளர்­கள் திண்­மக்­க­ழி­வு­களை சேக­ரித்து தரம்­பி­ரித்­துக் கழி­வ­கற்­றும் பிரி­வி­ன­ரி­டம் ஒப்­ப­டைத்து வரு­கின்­ற­னர்.

இந்த நடை­முறை மிக­வும் இறுக்­க­மாக இடம்­பெற்று வரு­கின்­றது. திண்­மக் கழி­வு­கள் யாவும் பொது இடங்­கள், சாலை­யோ­ரங்­கள் போன்­ற­வற்­றில் கொட்­டப்­ப­டக் கூடாது. தந்­போது சிலர் நடை­மு­றையை மீறி கழி­வு­களை சாலை­யோ­ரங்­க­ளில் கொட்­டி­விட்­டுச் செல்­கின்­ற­னர்.

இதற்­கா­கக் கழி­வு­களைக் கொட்­டு­வோரை இனம் கண்டு கொள்­வ­தற்கு கண்­கா­ணிப்­புக் கம­ராக்­கள் பொருத்­தப்­பட்டு வரு­கின்­றன. கண்­கா­ணிப்புக் கம­ராக்­கள் ஊடாக­ பொது இடங்­க­ளில் கழி­வு­க­ளைக் கொட்­டு­வோர் இனம் காணப்­பட்­டுச் சுற்­றுச் சூழல் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­ப­டு­வார்­கள்” என்று யாழ்ப்­பாண மாந­கர ஆணை­யா­ளர் மேலும் தெரி­வித்­தார்.

Share This Post

Post Comment