ஈராக்கில் சிக்கியுள்ள கனேடிய போர்வீரரை மீட்க நடவடிக்கை

ekuruvi-aiya8-X3

ஈராக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் கனேடிய போர் வீரர் ஒருவரை விடுவிப்பதற்காக  கனேடிய  அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அவர் நல்ல தேகாரோக்கியத்துடன் இருப்பதாகவும்,  அவரது விடுதலைக்கான  நடவடிக்கைகளில் அங்குள்ள கனேடிய  தூதரக  அதிகாரிகள்தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும் Newfoundland and Labrador மாகாணத்திற்குப் பொறுப்பான கனேடிய  மத்திய  அமைச்சர்  Judy Foot தெரிவித்துள்ளார்.

Mike Kennedy என்ற அந்த  முன்னார் இராணுவ வீரர்,  ஈராக்கின் வட பிராந்தியமான  Erbil இல்  மனிதாபிமானப்   பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில்  கைது  செய்யப்பட்டதாக அவரது தாயார்  Kay Kennedy  தெரிவித்துள்ளார்.

Kay Kennedy  இன் மற்றும் ஒரு  மகனான Kevin என்பவர்,  2007ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில்  இடம்பெற்ற  வீதியோர குண்டு வெடிப்பு ஒன்றில்கொல்லப்பட்ட  ஆறு கனேடிய வீரர்களில்  ஒருவர்   என்பது   குறிப்பிடத்தக்கதுafgan-cda-fallen-20100403.jpg.size.custom.crop.1086x635

Share This Post

Post Comment