இராணுவத்தினரால் பலவந்தமாகப் பறிக்கப்பட்ட காணிகளை மீட்டுத்தருமாறு இயக்கச்சி மக்கள் கோரிக்கை!

Facebook Cover V02

NYT2008112110222443Cஇயக்கச்சிப் பகுதியில் இராணுவத்தினரால் பலவந்தமாகப் பறிக்கப்பட்ட காணிகளை மீட்டுத் தருமாறு இயக்கச்சி மக்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 2006ஆம் ஆண்டு யுத்தத்தின் காரணமாக தமது பிரதேசங்களை விட்டு மக்கள் இடம்பெயர்ந்திருந்த நிலையில் அக்காணிகளை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர். யுத்தம் நிறைவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ளநிலையில் மக்களின் காணிகளில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்கள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. அத்துடன் இந்நிலங்களில் இராணுவத்தினர் பயிர்ச்செய்கை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சிப் பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டதிலிருந்து 16 குடும்பங்கள் நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். குறித்த 16 குடும்பங்களின் காணிகளிலேயே இராணுவத்தினர் முகாம் அமைத்து பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த பிரச்சனை தொடர்பாக கிராம அலுவலர், பிரதேச அலுவலர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் என அனைவரிடமும் முறையிட்டு எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லையெனத் அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.

Share This Post

Post Comment