இரணைமடுக்குளத்தின் புனரமைப்பு தடைப்பட்டமை தொடர்பில் ஆராய முதலமைச்சர் நேரில் பயணம்

Facebook Cover V02

viki_0609இரணைமடுக்குளத்தின் புனரமைப்பு தடைப்பட்டமை தொடர்பில் நேரில் ஆராய வட மாகாண முதலமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நாளை மறுதினம் திங்கள்கிழமை இரணைமடுவிற்கு நேரில் பயணிக்கின்றனர்.

கிளிநொச்சி மாவட்டம் இரணைமடுக் குளத்தின் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வந்தவேளையில் அதன் அபிவிருத்திப் பணிகளிற்கு இடையூறாக அதன் பொருட்களை பெறுவதற்கு மத்திய அரசின் கீழ்வரும் 3 திணைக்களங்கள் மாறி மாறித் தடை போடுவதனால் குளத்தின் பணிகள் முழுமையாகத் தடைப்பட்டு விட்டன.

இவ்வாறு தடையிடும் திணைக்களங்களான வன வளத் திணைக்களம் , தொல் பொருள் திணைக்களம் , கனிய வளங்கள் திணைக்களங்களிடம் உரிய அனுமதியை பெற்று வழங்குமாறு விவசாயிகளும் சகல அரசியல் வாதிகள் முதல் அதிகாரிகள் வரையில் நாடியும் இன்று வரை புனரமைப்புத் தொடர்பில் எந்த முன்னேற்றமும் கிடையாது.

இதனால் இறுதியில் விவசாயிகள் சார்பில் ஊடகத்தின் உதவியும் நாடப்பட்டது. இதன் பிற்பாடு நாளை மறுதினம் மாகாண முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களும் குளத்தின் தற்போதைய நிலையினை நேரில் பார்வையிடுவதற்காக நாளை மறுதினம் மாலை 4 மணிக்கு இரணைமடுக் குளப் பிரதேசத்திற்குச் செல்கின்றனர்.

இவ்வாறு செல்வது தொடர்பிலும் இரணைமடு விவசாயிகளிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை இவ் விடயம் தொடர்பில் முதலமைச்சரினால் நேற்றைய தினம் ஜனாதிபதியின் கவ னத்திற்கும் கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment