இரணைமடுக்குளப் பகுதியை இராணுவம் முற்றாக விடுவித்துள்ளது

ekuruvi-aiya8-X3

iranaimaduஇரணைமடுக் குளப் பகுதிக்கு அருகில் முகாம் அமைத்திருந்த இராணுவனர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். இறுதிப் போரின் பின்னர்; அந்தப் பகுதி இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது. இரணைமடுக் குளத்தைப்; பார்வையிட வரும் மக்களுக்குச் சிற்றூண்டிச் சாலை ஒன்றை அமைத்து இராணுவத்தினர் வியாபாரமும் செய்து வந்துள்ளனர்.

இரணைமடுக் குளத்தின் நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமான விடுதிகளை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர். இரணைமடுக் குளத்தின் அபிவிருத்திப் பணிகள் நிறைவடையும் நிலையில் குறித்த பகுதியைவிட்டு இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர். எனவே இரணைமடுக் குளத்தைப் பார்வையிட இனிமேல் சுதந்திரமாகச் செல்லலாம் எனப் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

Share This Post

Post Comment