அமெரிக்காவின் மீது யாரும் நம்பிக்கை வைக்க மாட்டார்கள் – ஈரான்

Iran0808அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை 2015-ம் ஆண்டு வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா ஆகியவற்றுடன் ஈரான் செய்துகொண்டது.
ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இருந்து அண்மையில் விலகிக்கொண்ட அமெரிக்கா, ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இது ஈரானின் வளர்ச்சிக்கும், அணு ஆயுதம் தயாரிப்பதற்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. இதனையடுத்து இரு நாடுகள் இடையேயும் மோதலான போக்கு நீடிக்கிறது. இதனையடுத்து பேச்சுவார்த்தையை மேற்கொள்ள தயாரென டொனால்டு டிரம்ப் குறிப்பிட்டார். ஆனால் ஈரான் நிராகரித்து வருகிறது.
ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி முகமது ஜாவத் ஜாரீப் பேசுகையில், ஒழுங்கற்ற முடிவுகளால் அமெரிக்காவின் மீதான நம்பிக்கையை உலக நாடுகள் இழந்துவிட்டது. இதன்பின்னர் அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை என்பது மிகவும் கடினமானது. பேச்சுவார்த்தை தொடர்பாக இப்போது யோசிக்கப்படுகிறது, அவர்களை எப்படி நாங்கள் நம்ப முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.





Related News

  • காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டு கொலை
  • அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் தலையீடு – ரஷிய பெண் மீது வழக்குப்பதிவு
  • ஜமால் கசோக்கி 2 மூத்த அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்- சவுதி அரேபியா ஒப்புதல்
  • பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு
  • பார்வையாளர்களின் கேள்விகளுக்கு ருசிகரமாக பதில்களை அளிக்கும் சோபியா ‘ரோபோ’
  • அமெரிக்காவின் கரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்க உள்ளதாக தகவல்
  • பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறாரா?
  • 7 நிமிட சித்ரவதை பத்திரிகையாளர் தலை துண்டித்து கொலை – ஆதாரம் உள்ளது துருக்கி
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *