இந்தோனேஷிய கடற்பரப்பில் 44 இலங்கைத் தமிழர்கள் தவிக்கிறார்கள்

ekuruvi-aiya8-X3

aus785அவுஸ்திரேலியாவுக்கு படகில் செல்ல முயன்ற இலங்கைத் தமிழர்கள் 44 பேர் இந்தோனேஷியாவின் ஆச்சே மாகாணத்தின் கடற்பரப்பில் சிக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியக் கொடியுடன் சென்ற இந்த படகில் 15 பெண்கள் மற்றும் ஒன்பது குழந்தைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

தமிழ் நாட்டில் பதிவு செய்யப்பட்ட படகு என சந்தேகிக்கப்படும் இந்தப்படகு கடந்த சனிக்கிழமையன்று (11.06.16) ஆச்சேயின் தலைநகரான பண்டா ஆச்சே அருகே உள்ள லோக்ங்கா, கடலோரப் பிரதேசத்திற்கு அப்பால் உள்ள கடல் பரப்பில், மீனவர்களால் கண்ணடறியப்பட்டது. இந்தப் படகு குறித்து, இந்தோனேஷிய குடிவரவுத்துறை அதிகாரிகளுக்கு மீனவர்கள் தகவல் கொடுத்தனர்.

இதன் பின்னர் அப்படகை அண்மித்த இந்தோனேஷிய அதிகாரிகளிடம், படகில் இருந்தவர்கள் தாங்கள் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்குச் செல்ல முயன்று கொண்டிருப்பதாகவும், தங்கள் படகில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுவிட்டது என்றும், போதிய எரிபொருள் இல்லை என்றும் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

aus645இந்த நிலையில், தாங்கள் தொடர்ந்து பயணத்தை மேற்கொள்வதற்கு தங்களுக்கு 7,000 லிட்டர் எரிபொருள் தேவை என அவர்கள் கோரினார்கள் என்றும், இந்தோனேஷிய அதிகாரிகள் அவர்களுக்கு 1,000 லிட்டர் எரிபொருள் கொடுத்து, இந்தோனேஷிய கடற்பரப்பை விட்டு வெளியேறுமாறு கூறியதாகவும் தெரிகிறது.

ஆனால், மீண்டும் ஞாயிற்றுக்கிழமை இந்தோனேஷிய கடற்பரப்பில் அதே இடத்துக்கே அவர்கள் திரும்ப சென்று 7,000 லிட்டர் எரி பொருள் கேட்டதாகவும், தங்கள் படகின் இயந்திரம் மீண்டும் கோளாறு செய்வதாகக் கூறியதாகவும் தெரிகிறது.

இதனிடையே படகில் இருந்தவர்களில் இருவர் கடலில் குதித்து, கரையை நோக்கி நீந்த முயன்றபோது, அவர்கள் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் எங்கிருந்து சென்றார்கள் என்பது இதுவரை தெரியவில்லை.

இவர்கள் நிலை குறித்து ஆராய, தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள ஐ.நா ஆசியா பிரிவின் அலுவலகத்திற்குத் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர்கள் நாளை செவ்வாய்க்கிழமை அங்கு செல்வார்கள் எனவும் தெரிகிறது.

ஆனால், தமிழ்நாட்டின் பவானிசாகர் முகாமில் இருந்து 23 இலங்கை அகதிகள் சில நாட்களுக்கு முன்னார் காணாமல் போனதாகவும், பின்னர் மாநிலத்தின் வேறு சில முகாம்களிலிருந்தும் சிலர் காணாமல் போனதாகவும் தகவல் வந்ததை அடுத்து போலிசாரிடம் புகார் செய்யப்பட்டிருப்பதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த படகில் வந்தவர்களின் படங்களை பவானிசாகர் முகாமில் எஞ்சியிருப்பவர்கள் சிலர் அடையாளம் கண்டுகொண்டுள்ளதாகவும் அதெரிவிக்கப்படுகிறது.

Share This Post

Post Comment