இந்தாண்டுக்கான சிறந்த விமானநிலையம் சாங்கி!

Thermo-Care-Heating

sankiஇங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்கைராக்ஸ் எனும் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் உலகிலுள்ள சிறந்த விமானநிலையத்தைத் தெரிவுசெய்து வருகின்றது. அந்தவகையில் இவ்வருடம் உலகிலேயே சிறந்த விமானநிலையமாக சிங்கப்பூரிலுள்ள சாங்கி விமானநிலையம் தெரிவாகியுள்ளது.

உலகிலுள்ள விமானநிலையங்களின் பராமரிப்பு, பாதுகாப்பு, பயணிகளின் வசதிவாய்ப்புக்கள் போன்றவற்றின் அடிப்படையிலேயே சிறந்த விமானநிலையம் தெரிவுசெய்யப்படுகின்றது. இதனடிப்படையில் சாங்கி விமானநிலையம் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் இதற்காக கடந்த ஒன்பது மாதங்களாக லட்சக்கணக்கான பயணிகளிடம் கருத்துக்கணிப்பு நடாத்தியதாகவும் ஸ்கைராக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வு அறிக்கையின்படி இரண்டாம் இடத்தினை சியோல் இன்சியோன் சர்வதேச விமான நிலையமும், மூன்றாவது இடத்தை மூனிச் விமான நிலையமும் பெற்றுள்ளன. அதேபோன்று டோக்யோ ஹனேடா 4வது இடத்திலும், ஹொங்காக் சர்வேதச விமான நிலையம் 5வது இடத்திலும் உள்ளன.

ideal-image

Share This Post

Post Comment