யாழ். இந்துக்கல்லூரிக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்!

ekuruvi-aiya8-X3

acf6027f5bcbce3b1be1a25380e1910e_1507961990-sயாழ். இந்துக்கல்லூரிக்கு முன்னால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்ட குழுவினர் கறுப்புக்கொடிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ். இந்துக் கல்லூரியில் இன்றும் நாளையும் தமிழிமொழித் தின விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்வதற்கு வருகை தந்துள்ளார்.

யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள மைத்திரிபால சிறிசேன நிலாவரையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் விவசாய நிகழ்வொன்றில் கலந்துகொண்டுள்ளார்.

அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவேண்டாமெனவும் தான் மைத்திரிபால சிறிசேனவைச் சந்திப்பதற்கு தான் ஒழுங்குபடுத்தித் தருவதாக யாழ். சிரேஷ்ட காவல்துறை மா உறுதியளித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share This Post

Post Comment