என்ஜின் பிரச்சினை காரணமாக 47 விமானங்களை ரத்து செய்தது இண்டிகோ நிறுவனம்

Thermo-Care-Heating
indigoமும்பையில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநில தலைநகரான லக்னோ நோக்கி நேற்று காலை 186 பயணிகளுடன் சென்ற ஏர் இன்டிகோவின் A320 ரக ஏர்பஸ் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்தின் இரண்டாவது என்ஜின் திடீரென்று முற்றிலுமாக செயலிழந்தது. இதையடுத்து விமானம் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இச்சம்பவத்தை தொடர்ந்து இவ்வகை என்ஜின்கள் பொருத்தப்பட்ட ஏர் இன்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான 8 விமானங்கள் மற்றும் ஏர்கோ நிறுவனத்துக்கு சொந்தமான 3 விமானங்கள் என மொத்தம் 11 விமானங்களின் சேவைகளை உடனடியாக நிறுத்துமாறு உள்நாட்டு விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடுவானில் பறக்கும்போது அடிக்கடி என்ஜின்கள் செயலிழப்பதால் ‘A320 நியோ’ ரக விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இன்டிகோ நிறுவனம் இன்று 47 உள்நாட்டு விமானங்களின் சேவையை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது. டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு, பாட்னா, ஸ்ரீநகர், புவனேஷ்வர், அமிர்தசரஸ் மற்றும் கவுகாத்தி போன்ற நகரங்களிலிருந்து செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ideal-image

Share This Post

Post Comment