டொனால்ட் டிரம்ப் அமைச்சரவையில் இந்தியருக்கு பதவி

ekuruvi-aiya8-X3

Bobby-Jindal-அமெரிக்காவின் வருங்கால அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான மந்திரிசபையில் இந்திய – அமெரிக்க தொழிலதிபரான பாபி ஜிண்டாலுக்கு மந்திரி பதவி அளிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் பதவிக்கு கடந்த 8-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். அதிபர் தேர்தலுடன் அந்நாட்டின் பாராளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த வேட்பாளர்களே அதிகளவில் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், வரும் ஜனவரி மாதம் 20-ம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பதவி ஏற்கவுள்ள நிலையில் அந்நாட்டின் புதிய மந்திரிகளை நியமிப்பதற்கான தேர்வு தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன.

அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான ‘வால் ஸ்டிரீட் ஜர்னல்’ வெளியிட்டுள்ள தகவலின்படி, டொனால்ட் டிரம்ப்பின் தலைமையிலான மந்திரிசபையில் இந்திய – அமெரிக்க தொழிலதிபரான பாபி ஜிண்டாலுக்கு சுகாதாரத்துறை மந்திரி பதவி அளிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

லூசியானா மாநில கவர்னராக இருமுறை பதவி வகித்தவரும், அந்நாட்டின் பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையின் உறுப்பினராகவும், முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் தலைமையிலான மந்திரிசபையில் அமெரிக்காவின் சுகாதாரத்துறை செயலாளரின் முதன்மை ஆலோசகராகவும் பணியாற்றிய அனுபவம் நிறைந்தவர் என்பதால் இந்த பதவியில் அவர் அமர்த்தப்படலாம் என அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட கட்சியினரிடையே ஆதரவு திரட்டும் குடியரசு கட்சியின் உள்மட்ட வேட்பாளர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்-ஐ எதிர்த்து போட்டியிட்ட பாபி ஜிண்டால், பின்னர் வேட்பாளர் போட்டியில் இருந்து விலகினார்.

ஆரம்பகாலத்தில் டிரம்ப்பை கடுமையாக விமர்சித்துவந்த பாபி ஜிண்டால்(45), அவரது தலைமையிலான மந்திரிசபையில் சுகாதாரத்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டால் அமெரிக்க மந்திரிசபையில் இடம்பெற்ற முதல் இந்திய – அமெரிக்கர் என்ற பெருமை இவரைச்சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், தன்னை எதிர்த்து குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட இன்னொருவரான பென் கார்சனின் பெயரும் டொனால்ட் டிரம்ப்பின் உத்தேச மந்திரிசபை பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.

Share This Post

Post Comment