ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்கும் : இந்திய பிரதமர்
Mar 19 2012 11:02:54
ஐ.நா. மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் அமெரிக்கா முன்வைத்திருக்கும் பிரேரணையின் விவரம் முழுமையாக தெரியவில்லை என்றும் அதைப் படித்து விட்டு ஆதரித்து வாக்களிக்க இந்தியா ஆர்வமாக உள்ளது என இந்திய தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மன்மோகன் சிங்கின் இந்த அறிவிப்பு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகலாம் என்று கருதப்படும் திமுகவை, கொங்கிரஸ் மேலிடம் தற்காலிகமாக அமைதிப்படுத்த எடுத்துள்ள முயற்சியாக கருதப்படுகிறது.
திமுக தனது உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தை நாளை கூட்டியுள்ளதாக அறிவித்தது. இன்று காலை திடீரென ஒரு உண்ணாவிரத அறிவிப்பையும் திமுக தலைமை அறிவித்தது. அதன்படி 22ம் தேதி கருணாநிதி தலைமையில் தமிழகம் முழுவதும் திமுகவினர் உண்ணாவிரதம் இருப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்தப் பின்னணியில் இன்று மக்களவையில் பேசிய மன்மோகன் சிங், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை ஆதரிக்க இந்தியா முனைப்புடன் உள்ளதாக குறிப்பிட்டார்.
இருப்பினும் அவர் நேரடியாக இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று கூறவில்லை. மாறாக, அதை முழுமையாகப் படித்து விட்டு ஆதரவு தெரிவிப்போம் என தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமை பேரவை கூட்டத்தில் இலங்கையில் நடந்த மனித உரிமைமீறல், போர்க்குற்றம் குறித்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதாக எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது கவலைகளை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களது கவலையில் நானும் பங்கேற்கிறேன் என மன்மோகன் சிங் தெரிவித்தார்.
இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காக பல்வேறு நடவடிக்கைளை மத்திய அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. அமெரிக்கா ஆதரவில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் குறித்து முழுமையாகத் தெரியவில்லை. அதை அறிந்து கொண்ட பின்னர் அதை ஆதரித்து வாக்களிப்போம். இந்த தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க இந்தியாவும் முனைப்புடன் உள்ளது என தெரிவித்தார்.
மன்மோகன் சிங்கின் இந்த அறிவிப்பை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேசைகளைத் தட்டி வரவேற்றனர். அதேசமயம், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பித்துரை எழுந்து, தலைமை அமைச்சரின் பதில் நேரடியாக இல்லை என தெரிவித்தார்.
சென்னையை அடுத்த ஆவடி பகுதியில் ஆவி உலவுவதாக மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. சென்னை ஆவடி காமராஜர் நகர் ஆற்றங்கரை தெரு ஓரத்தில் ஒரு மின்கம்பம் உள்ளது. அமாவாசை தினம் நெருங்கும் போது
பிளாஸ்ரிக் மண்ணை மாசுபடுத்தும் மிகக் கொடிய நச்சுப் பொருள் என உலக நாடுகள் பலவற்றிலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விழிப்புணர்வு பரப்புரைகள் செய்து வரும் வேளையில் இந்தியாவின்
தலைமறைவாகி கர்நாடக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நித்தியானந்தா இன்று பெங்களூரை அடுத்துள்ள ராம்நகர் மாவட்ட மஜிஸ்ரேட் நீதிமன்றில் சரணடைந்தார். சரணடைந்த நித்யானந்தாவை ஒரு நாள் நீதிமன்றக் காவலில்
அகோர வெய்யிலினால் ஆந்திர மாநிலம் முழுவதும் ஒரே நாளில் 148 பேர் பலியாகி உள்ளனர். கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 110 டிகிரி வெயில் சுட்டெரி த்தது. இதில் காக்கிநாடா, துணி ஆகிய மண்டலங்களில் 36
உலக செஸ் போட்டியில் இந்திய வீரரான விஸ்வநாதன் ஆனந் இம்முறையும் சாம்பியன் பட்டத் தினை வென்றுள்ளார். ஏற்கனவே 2000, 2007, 2008, 2010 ஆகிய நான்கு ஆண்டுகளிலும் சாம்பியனாக வந்த இவர் இம்முறை
இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் பதவிக்காலம் ஜூலை 24 அன்று முடிவடைகிறது. அதற்கு மறுநாள் புதிய ஜனாதிபதி பதவியேற்க வேண்டும். ஜனாதிபதி தேர்தல் அதிகாரி யாக செயல்படவிருக்கும் ராஜ்யசபா செகரட்டரி
தமிழகத்தில் 60,000 வருட பழமையான மனிதன் ! இந்தியா என்னும் துணைக் கண்டத் தின் முதல் குடிமகன் என்ற பெருமையை தமிழ் நாட்டை சேர்ந்த திரு.விருமாண்டி என்னும் தமிழருக்கு கிடைத்திருக்கின்றது. மதுரை
ஐ.நா. மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் அமெரிக்கா முன்வைத்திருக்கும் பிரேரணையின் விவரம் முழுமையாக தெரியவில்லை என்றும் அதைப் படித்து விட்டு ஆதரித்து வாக்களிக்க இந்தியா ஆர்வமாக உள்ளது என இந்திய தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.