இந்தியாவுக்கு செல்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்குமாறு சீனா அறிவுறுத்தல்

ekuruvi-aiya8-X3

china-930x718இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் சீனாவின் எல்லையான டாங்லாங் பகுதி உள்ளது. பூடான் எல்லையும் அதே பகுதியில் சந்திக்கிறது. மூன்று நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் இந்த இடத்தில் சீனா சாலைப் பணிகளைத் தொடங்கியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவும் சீனாவும் ராணுவத்தைக் குவித்துள்ளன.

இந்த சூழ்நிலையில், இந்தியாவுக்கு செல்லும் சீன மக்கள் ஜாக்கிரதையாக இருக்கும்படி சீன அரசு இன்று அறிவுறுத்தி உள்ளது. டெல்லியில் உள்ள சீன தூதரகம் மூலம் இந்த அறிவுறுத்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், ‘சீன பயணிகள் தங்கள் பாதுகாப்பில் மிகுந்த கவனம் செலுத்துவதுடன் தேவையான முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தங்கள் பொருட்களின் பாதுகாப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற பயணத்தை குறைக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

இது பயண எச்சரிக்கை அல்ல, சீன பயணிகள் கவனமாக இருக்கவேண்டும் என்பது தொடர்பான அறிவுறுத்தல் என சீன வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Share This Post

Post Comment