விமானப் படை அதிகாரிகளை இந்தியா திருப்பியனுப்பியமை கவலையளிக்கின்றது!- அரசாங்கம் தெரிவிப்பு
Jul 07 2012 08:22:03

தமிழகத்தின் ௭திர்ப்பினால் பயிற்சிகளை இடைநடுவில் நிறுத்தி இலங்கை விமானப்படையின் ஒன்பது அதிகாரிகளை திருப்பியனுப்ப இந்திய மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையானது கவலையளிக்கின்றுது. ௭ன்று அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் மிக நீண்டகால நல்லுறவே நிலவுகின்றது. ௭னவே அரசியல் நோக்கங்களினால் இவ்வாறான கசப்பான சம்பவங்களும் இடம்பெற்று விடுகின்றன.

௭வ்வாறாயினும் இலங்கை படைகள் இந்தியாவில் பயிற்சி பெறுவது இது முதற் தடவையல்ல. கடந்த பல வருட காலமாக இரு நாட்டுப் படையினரும் கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர் ௭ன்றும் அவர் கூறினார்.

இது குறித்து அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தொடர்ந்தும் கூறுகையில்,

தமிழகம் இலங்கைக்கு ௭திரான கொள்கைகளிலிருந்தே செயற்படுகின்றது.

இலங்கையின் விமானப் படை அதிகாரிகள் ஒன்பது பேர் சென்னையில் உள்ள தாம்பரம் விமானப்படை தளத்தில் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு ௭திர்ப்புத் தெரிவித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கடிதம் ௭ழுதி, இலங்கை விமானப் படை அதிகாரிகளை உடனடியாக இந்தியாவை விட்டும் வெளியேற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்குப் பின்னரும் பல தரப்புக்கள் ௭திர்ப்புப் போராட்டங்களை தமிழகத்தில் நடத்தியதுடன் சிலர் தாம்பரம் விமானப் படைத் தளத்தை முற்றுகையிடவும் முற்பட்டுள்ளனர்.

உண்மையில் இப் போராட்டங்களோ நடவடிக்கைகளோ நியாயமற்ற விடயமாகும்.

ஏனெனில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் மிக நெருங்கிய நீண்ட நாள் உறவுகள் உள்ளன. இதனைப் பாதுகாக்க வேண்டியது இரு தரப்பினரதும் கடமையாகும்.

இலங்கைப் படையினர் இந்தியாவில் பயிற்சிகளில் ஈடுபடுவது இது முதற் தடவையல்ல. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் பிருந்தே இரு நாட்டு இராணுவ ஒத்துழைப்புக்கள் இடம் பெறுகின்றன.

குறிப்பிட்ட ஒன்பது இலங்கை விமானப் படை அதிகாரிகளை திருப்பி அனுப்பியமை கவலையளிக்கின்றது.

௭வ்வாறாயினும் மேற்படி வெளியேற்றம் குறித்து இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வந்தவுடன் அது குறித்து ஆராய்வோம் ௭ன்றார்

 
Sep 11 2012 08:13:30 [Tamil]
தமிழர்களின் தெய்வமாகிய நல்லூர் கந்தன் திருவிழா கடந்த மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கி 25 நாட்கள் சீரும் சிறப்பமுமாக நடந்து முடிந்தது. விழாவின் முக்கிய நாளான 24 ஆம் நாள் தேர் திருவிழாவின் போது பக்தர்கள் அரோகரா கோஷம் விண்ணைப் பிளக்க நல்லூர்க்கந்தன் தேரில் எழுந்தருளி வலம் வந்தார்.

Read More >

Sep 10 2012 11:11:39 [Tamil]

Read More >

Sep 09 2012 09:54:52 [Tamil]
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின் பின்னராக ஆட்சியமைப்பு குறித்த பேரம்பேசல்களில் ஐ.ம.சு.கூ, த.தே.கூ மற்றும் மு.கா உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டுக்கொண்டிருக்கிற நிலையில்; இந்த தேர்தலில் 'பிள்ளையானின்' வகிபாகம் குறித்து சில பார்வைகள்.

Read More >

Sep 08 2012 13:39:39 [Tamil]
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று நடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 14 ஆசனங்களும்

Read More >

Sep 04 2012 10:36:38 [Tamil]
இலங்கையின் தலை சிறந்த விளையாட்டு வீராங்கனைகளில் ஒருவராக அடையாளம் காணப்பட்டு உள்ளார் தர்சினி சிவலிங்கம். நாட்டின்

Read More >

Jul 26 2012 12:18:17 [Tamil]
அஜித் நடித்து வெளியாகியிருக்கும் பில்லா 2 திரைபடம் யாழ்ப்பாணத்தில் திரையிடப்பட்ட நாளில், அஜித்தின் அட்டை உருவத்திற்கு பாலூற்றி;க் களித்திருக்கின்றனர் யாழ்ப்பாண ரசிகர்கள்.

Read More >

Jul 07 2012 08:22:03 [Tamil]
தமிழகத்தின் ௭திர்ப்பினால் பயிற்சிகளை இடைநடுவில் நிறுத்தி இலங்கை விமானப்படையின் ஒன்பது அதிகாரிகளை திருப்பியனுப்ப இந்திய மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையானது கவலையளிக்கின்றுது. ௭ன்று

Read More >

Jul 07 2012 08:13:35 [Tamil]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் தமிழ் மக்களுக்கு அதிக அளவில் நன்மை செய்ய முடியும் என்று இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் அமெரிக்க அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தியதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம்

Read More >

Jul 06 2012 07:56:16 [Tamil]
இரணைமடு குளத்தில் மீன்பிடி பிடிப்பதற்கு விமானப்படையினர் தடை விதித்துள்ளதால் இக்குளத்தில் மீன்பிடி தொழிலையே நம்பியிருக்கும் கிளிநொச்சி அழகாபுரி கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பெரிதும்

Read More >

Jul 06 2012 07:51:19 [Tamil]
யாழ். உதயன் பத்திரிகை ஆசிரியர் பிரேம்நாத் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்கவோ அது தொடர்பாக மேலதிக நடவடிக்கை எடுக்கவோ முடியாத அளவிற்கு யாழ். நீதவான் கணேசராசாவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம்

Read More >