இனவாதத்தைத் தூண்டுபவர்கள் குப்பைக் கூடைக்குள் தூக்கி எறியப்படுவார்கள் – ரணில்!

Facebook Cover V02

Ranil-3குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இன மற்றும் அடிப்படைவாதங்களைத் தூண்டிவிடுபவர்கள் விரைவில் குப்பைக் கூடைக்குள் தூக்கியெறியப்படுவார்கள் என சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் ‘பிரதமரிடம் கேளுங்கள் நேரத்தின்போது ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் மரிக்காரால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இன மற்றும் அடிப்படைவாதங்களை தூண்டிவிடும் செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இவ்வாறான செயற்பாடுகளைத் தூண்டிவிடுபவர்கள் இறுதியில் குப்பைக் கூடைக்குள் தூக்கியெறியப்படுவார்கள் என்பதே வரலாற்றுச் சான்றாகும்.

கடந்த ஆட்சியின் போது இன மற்றும் அடிப்படைவாத செயற்பாடுகள், அனுசரணையுடன் இடம்பெற்றிருந்தன. எனினும், தற்போது அவ்வாறான அனுசரணை எதுவும் வழங்கப்படுவதில்லை.

இதேவேளை “அதிகாரத்துக்கு வர முயல்வோரே இனவாதத்துக்கு அர்த்தம் கற்பிக்கப்பார்ப்பதாகக் குறிப்பிட்ட அவர் இனவாதத்தையும் அடிப்படைவாதத்தையும் தூண்டிவிட்டு குறுகிய அரசியல் இலாபத்தைப் பெற்றுக்கொள்வதே இவர்களது நோக்கமாகும் என்றும் குறிப்பிட்டார்.

Share This Post

Post Comment