தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு ஜே.வி.பியிடம் இல்லை : சுரேஸ் பிரேமச்சந்திரன்

ekuruvi-aiya8-X3

Suresதமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான முழுமையான, திட்டவட்டமான தீர்வு மக்கள் விடுதலை முன்னணியிடம் இல்லையென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இணைந்து போராட தயாரென, அண்மையில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருக்கும் நிலையில், இது குறித்து கேட்டபோதே சுரேஸ் பிரேமச்சந்திரன் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.

எனினும் அன்றாட பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி பேசுவதற்குத் தயாராக இருப்பதாகவும், அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு போன்ற விடயங்களில் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் குறிப்பிட்ட அவர், தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கான தீர்வு அவர்களிடம் இல்லை என்பதே உண்மையான விடயமென தெரிவித்தார்.

Share This Post

Post Comment