தமிழர் இனப்படுகொலையை மூடிமறைத்தவர் ஐநாசெயலாளர் கதிரையைக் கைப்பற்றும் முயற்சி!

ekuruvi-aiya8-X3

helanதமிழர் இனப்படுகொலையான முள்ளிவாய்க்கால் இப்படுகொலை நடைபெற்றபோது ஐநாவின் அபிவிருத்தித் திட்டத்திற்கு தலைமைதாங்கிய ஹெலன் கிளார்க் ஐநா செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதற்கு கடும் பிரயத்தனம் செய்து வருகின்றார். இதற்கு ஐநா அமைப்பின் சில அதிகாரிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் படுகொலை நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம் அதனை ஐநா தடுத்து நிறுத்தத் தவறியமைக்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஹெலன் கிளார்க் ஆகையால் அவருக்கு தற்போது கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது ஐநா செயலாளர் நாயகமாக இருக்கும் பான்கிமூன் அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து ஓய்வுபெறவுள்ள நிலையில் அவரது பதவிக்கு தற்போது ஹெலன் கிளார்க் போட்டியிடத் தீர்மானித்துள்ளார்.

Share This Post

Post Comment