இங்கு ஓரு இனம் புரியாத உணர்வு நிலையில் இந்த உருளும் இருக்கையில் நான் இருந்து கொண்டு இருக்கின்றேன்.

unnamed-41-450x338கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக என்போன்றோரோடு சேர்ந்து தொடர்ந்த முயற்சியின் பலனாக நாம் இன்று ஓரு தற்காலிகமான இடத்தில் மாற்றுத்திறனுக்கான பயிற்சி நிலையத்தையும்வதிவிடத்தையும் ஆரம்பிக்கும் நிலையில் இருக்கின்றோம் என்கின்ற மகிழ்ச்சி ஓரு புறம்; உள்ளது.

ஆனால் இன்னமும் எத்தனை உறவுகள் அவயவங்களை இழந்து, எந்த உதவிகளும்போய்ச்சேராமலும், உதவிகளை தேடி அவர்கள் வரமுடியாத உடல்நிலையிலும் உள்ளார்கள் என்கின்ற துயர்நிலையை எண்ணும் போது, நாம் இன்னமும் எவ்வளவு தூரம் பயணிக்கவேண்டியவர்களாக இருக்கின்றோம் என்கின்ற துன்பம் மறுபுறமுமாக, கலவையான உணர்வுகளுடன் உங்கள் முன் இருக்கின்றேன்.

இந்த நிகழ்வில் அரசியல் தலைவர்கள், நிர்வாகத்துறையில் உள்ளவர்கள், தொழில்துறையில் உள்ளவர்கள், மக்கள் செல்வாக்குமிக்கவர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டு இந்தநிகழ்வை பெருமிதப்படுத்தியிருக்கின்றீர்கள் என்பது, நாம் தனித்துவிடப்பட்டவர்களல்ல என்கின்ற நம்பிக்கையையும், துணிச்சலையும் தருகின்றது.

உங்கள் எல்லோரினதும் ஒத்துழைப்புடன், இந்ததேசத்தில் மாற்றுத்திறனுக்கான ஓரு மத்திய நிலையத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்பதே எமது பேரவா ஆகும். முறையான அரச நடவடிக்கைகள் மூலம் இது நடைபெறும் போது என்போன்றோர்அனேகமானோர் உயிரோடு இருப்பது கேள்விக்குரியதாகவே இருக்கின்றது.

இது தற்காலிக நிலையம் தான். ஆனால் எம்மிடம் இந்த தேசத்திற்கான நிரந்தரமான மாற்றுத்திறனாளிகளுக்கான மையம் ஒன்றை ஆரம்பிப்பதற்கான பூர்த்தி செய்யப்பட்ட வேலைத்திட்டம்ஒன்றும் உள்ளது. அதனை ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க வேலைகள் நடைபெற்று வருகின்ற என்பதையும் நாம் இந்த இடத்தில் சொல்லியே ஆக வேண்டும்.

காரணம் அங்கவீனர்கள் அல்லதுமாற்றுத்திறனாளிகள் என்பவர்கள், தனியே போர் அனர்த்தத்தில் அகப்பட்டிருப்பவர்கள் மட்டுமல்ல. விபத்தின் போது அல்லது நோயினால் இந்த நிலைக்கு தள்ளப்பட்டோரும் சேர்ந்த சமுகமாகஇன்று சவால்களோடு வாழ்வை எதிர்கொள்கிற மக்களே மாற்றுத் திறனாளிகள்.

ஒரு சக மனிதனை, மீட்டு மீண்டும் சமூக வாழ்வுடன் இணைப்பதற்கான, பலம் வாய்ந்த சிறப்பான அமைப்புகள்அந்த நேரத்தில் இல்லை என்கின்ற இடைவெளியில் இருந்தே நாம் எமது வேலைத்திட்டத்தையும் அதற்கான நிறுவனத்தையும் ஆரம்பித்தோம்.

எமது நிறுவனம் 06-02-2013அன்று ஆரம்பிக்கப்பட்ட போது, தனது இலக்கு என்ன என்பது தொடர்பில் பலவாறு ஆலோசனைகளை மேற்கொண்டது. இந்த தேசத்தில் நடந்து முடிந்த அனர்த்தம், எமதுசமூகத்தின் அனைத்து தரப்பிலும் மிகப்பெரும் சேதாரத்தை உண்டு பண்ணியுள்ளது. அனைத்துவளங்களும் மீட்டுருவாக்கம் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.

அதனை ஓரிரண்டுநிறுவனங்களால் மட்டும் செய்ய முடியாது என்பதையும் நாம் அறிவோம். காரியசாத்தியமாக சிந்திப்பது என்பதில் நாம் தெளிவாக இருக்கவேண்டியுள்ளது.

எனவே எம்மிடம் உள்ள வளங்களைகொண்டு அல்லது எம்மால் திரட்ட முடியும் என்று நாம் நம்புகின்ற வளங்களுக்கு உட்பட்டு, இந்த சமூகத்திற்கும் நீண்ட காலத்திற்கு நன்மைபயக்க கூடிய தேவைகளுக்கு என்ன வேலைத்திட்டத்தைமுன்னெடுப்பது என்று எண்ணியபோது, கிடைத்தது தான் இந்த மாற்றுத்திறனுக்கான பயிற்சி மையம்.

இந்த சமூகம் என்பது, பல தனிமனிதர்கள் அங்கம் பெறுகின்ற ஒரு அலகு. இங்கே அனைவரும் சமமாக, கண்ணியமாக தங்களது வாழ்வை, யாரிலும் தங்கியில்லாது முழுமையாக வாழ்ந்து,சமூகத்திற்கும் பங்களிக்கும் போது தான் இந்த அலகு என்பது முழுமை பெறும். இன்று இந்த சமூகம் அங்கவீனப்பட்டுக்கிடக்கின்றது.

இந்த சமூகத்திற்கு பயன்படக்கூடிய எத்தனையோ உறவுகள்,அங்கவீனப்பட்டு யாரோ ஒருவரில் தங்கிவாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பது என்பது அதனைத் தான் அடையாளப்படுத்துகின்றது. எனவே தான் எமது நிறுவனம் இதனை ஒரு சமூக வேலைத்திட்டமாகவரித்துக்கொண்டிருக்கின்றது. எமது நிறுவனத்தின் பெயர் கூட அதனை அடிப்படையாக கொண்டது தான். ளுயஎந என்பது சேமிப்பது அல்லது பாதுகாப்பது.

Act என்பது இயங்குதிறன் அல்லதுஇயங்குநிலை என்பதன் ஆங்கில வடிவமான Activities என்பதன் சுருக்கம். ஒரு மனிதனின் இயங்குதிறனை பாதுகாத்து அல்லது சேமித்து, அவன் அவற்றை இழந்து இருக்கின்ற போது மாற்றாகவேறொரு திறனை உருவாக்கி அவனை சமூகத்தில் உள்ள ஏனையவர்களுடன், சக மனிதனாக வாழ வைப்பதே எமது நிறுவனத்தின் நோக்கம். எமது இலச்சனையில் பயன்படுத்தப்பட்டுள்ளவண்ணங்களும் உளவியல் ரீதியில் அமைதி, தூய்மை, மகிழ்ச்சி என்பவற்றை குறிப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளன.

வெறுமனே உதவிநிதிகளை பெற்றுக்கொண்டு கையேந்தி வாழ்பவனாக இந்த தேசத்தின் எந்தவொரு பிள்ளை வாழ்வதையும் எமது நிறுவனம் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த தேசத்தின் ஒவ்வொருபிள்ளையும், அவன் எந்த நிலையில் இருந்தாலும் அங்கங்களை இழந்திருந்தாலும், திறன்களை இழந்திருந்தாலும், அவற்றுக்கான மாற்றுவழிகளை அல்லது மாற்றுத்திறன்களைஉருவாக்கிக்கொண்டு, தங்கியிருப்போரையும் தன்னுடைய வாழ்வையும் எதிர்கொண்டு சுயமாக வாழ்ந்து, இந்த சமூகத்திற்கும் பயனுள்ளவனாக வாழ வேண்டும்.

இதற்கு இந்த நிறுவனம்தன்னாலான பணிகளை ஆற்றும். இதனைத் தான் எமது புலம்பெயர்ந்த உறவுகளும், இங்குள்ள உறவுகளும் எதிர்பார்க்கின்றார்கள். இதனை உதவிகளை எதிர்பார்க்கின்ற எங்களது நண்பர்களும்,பயனாளிகளும் கூட கொஞ்சம் புரிந்து கொள்ள வேண்டும்.

Save-Act நிறுவனத்திற்கு உள்நோக்கங்கள் எதுவும் கிடையாது. நாம் வெளிப்படையாக இயங்குகின்றோம், அல்லது அதற்கான கரிசனையை கொண்டிருக்கின்றோம். எமது நிறுவனத்திற்கென்றுபெரிய நிறுவனங்களினதோ அமைப்புகளினதோ அரசினதோ உதவிகளும் கிடையாது.

இந்த நிறுவனம் நான் மேற்சொன்ன எமது கொள்கையுடன் ஒத்த கொள்கையுடைய தனிமனிதர்கள்,மன்றங்கள் மற்றும் சிறிய அமைப்புகளின் கூட்டு ஒத்துழைப்பில் சேவையாற்றி வருகின்றது. இந்தநேரத்தில் இந்த அமைப்பிற்காக தங்களது அருமையான நேரங்களை ஒதுக்கி, இந்த மனிதாபிமானபணிக்காக உழைத்துவரும், உலகின் பல பாகங்களிலும் உள்ள நண்பர்கள் அனைவரினதும் கரங்களை நாம் நன்றியுணர்வுடன் பற்றிக்கொள்கின்றோம்.

இன்று தான் உங்களில் பலருக்கும் எமது நிறுவனத்தையும், நிறுவனத்தின் பெயரையும் தெரிந்திருக்கும். ஆனால் இது இந்த நிறுவனத்தின் தொடக்க விழாவோ அல்லது அறிமுக விழாவோ அல்ல.நாம் இதுவரையில் 200 ற்கு மேற்பட்ட உதவிகளை 4 மாவட்டங்களில் மேற்கொண்டிருக்கின்றோம். எந்த உதவிகளும் போய்ச்சேராத பயனாளர்களை தேடிச்சென்று அவர்களுக்கான முதற்கட்டவாழ்வாதார உதவிகளை செய்திருக்கின்றோம்.

எமது உதவிகள் முதற்கட்ட உதவி, கல்வி உதவி, வாழ்வாதாரஉதவி, சுயதொழில் உதவி, மருத்துவ உதவி என வகைப்படுத்தப்பட்டுள்ளது. மழைக்காலஅனர்த்ததின் போது, மாற்றுத்திறனாளிகளின் விசேட தேவையை புரிந்து கொண்டு, அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை அவர்களின் இருப்பிடங்களுக்கே தேடிச்சென்று வழங்கியிருந்தமையைஅவர்கள் அறிவார்கள். யாரும் எங்களை தவறாக புரிந்து கொள்ளக்கூடாது.

மாற்றுத்திறனாளிகளை மட்டுமே நாம் கவனத்திலெடுத்திருப்பது, எமது நிதிவளத்தின் சுருக்கத்தினாலும், அவர்களால்மற்றையவர்கள் போல நிவாரணங்களை தேடிச்சென்று பெற்றுக்கொள்ளும் உடல்வலு துரதிஸ்டவசமாக அவர்களிடம் இல்லை என்கின்ற ஒற்றைக்காரணத்தினாலும் மாத்திரமே.

எம்மிடம் வளங்கள்பெருகும் பட்சத்தில், கொடையாளர்கள் எம்முடன் இணையும் நிலையில், சமூகத்தின் ஏனைய தரப்பினரின் மனிதாபிமான பிரச்சனைகளிலும் நிச்சயம் நாம் கரிசனை காட்டுவோம். அதற்கானநிறுவன ரீதியான, நிர்வாக ரீதியான உட்கட்டுமானம் நிச்சயம் எம்மிடம் உண்டு.

இந்த நேரத்தில் இங்கே மனிதாபிமான பணிகளை மேற்கொண்டு வரும் உயிரிழை, வரோட், …. போன்ற தொண்டுநிறுவனங்களின் பணிகளையும் நாம் குறிப்பிட வேண்டும். நடந்து முடிந்தஅனர்த்தத்தில் இருந்து எமது சமூகத்தை இந்தளவுக்கேனும் ஓரளவு மீட்கமுடிந்திருக்கின்றது என்றால், அதில் இவர்கள் போன்ற மனிதாபிமான அமைப்புகளின் செயற்பாடுகள் கணிசமானபங்களிப்பை வழங்கியமையே காரணம்.

இந்த சமூகத்திற்கு செய்யப்பட வேண்டிய பணிகளை பட்டியலிட்டு, அவற்றை தமக்குள் பங்கீடு செய்து, நிறுவனங்கள் ஒன்றாக பணியாற்றும் ஒருசுமுகமான சூழல் ஒன்றே, இந்த சமூகத்தை மீட்டெடுக்கும். இனிவரும் காலத்தில் அவ்வாறான சூழலை உருவாக்க முடியும் என்று நாம் உறுதியுடன் நம்புகின்றோம்.

ஆரம்பத்தில் நாம் ஆசைப்பட்ட வேகத்தில் எம்மால் பணியாற்ற முடிந்திருக்கவில்லை. அதற்கு ஒரே காரணம் தேவையான நிதிவளங்கள் எமக்கு கிடைத்திருக்கவில்லை. அந்த நேரத்தில் எம்மைஆற்றாமையும் வெறுமையும் சூழ்ந்து சோர்வு ஆட்கொள்ளும். அந்த நேரங்களில் எம்மை திடப்படுத்தி, இது ஒரு சமூகத்திற்கான நீண்டகாலப்பணி, எனவே உதவிகள் கிடைக்கவில்லை என மனம்சோராமல், இதனை ஒரு நிறுவனமாக வளர்க்க வேண்டிய உட்கட்டுமான வேலைகளை செய்யுங்கள்.

வெளிப்படையாக இயங்க கற்றுக்கொள்ளுங்கள், தகமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்உதவிகள் கிடைக்கும் போது துரிதமாக செயற்பட அவை துணைசெய்யும் என ஆலோசனை வழங்கி எம்மை வழிநடாத்திய, இந்த நிறுவனத்தின் நிறுவுனர் மற்றும் துணை-நிறுவுனர் ஆகியோரின்பெறுமதிமிக்க வழிநடாத்துதலையும், உழைப்பையும் இந்த நேரத்தில் நாம் நன்றியுடன் நினைவுகூருகின்றோம். அவர்களின் வழிகாட்டுதலில் உருவானது தான் இந்த நிறுவனத்தின் இயக்குனர்சபை.

இந்த இயக்குனர்சபைக்கு அவர்கள் விடுத்திருக்கும் ஒரே வேண்டுகோள், இந்த நிறுவனத்தை தொழில்நேர்த்தி மிக்க (Professional) தொண்டு நிறுவனமாக வளர்த்தெடுக்க வேண்டிய பணிகளைஇறுக்கமுடன் மேற்கொள்ளுங்கள். ஆனாலும் ஒவ்வொரு விடயங்களிலும் மனிதாபிமானத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்.

ஏனெனில் இது எமது மக்களுக்காக உருவாக்கப்பட்டது. அவர்களுக்காகஎமது நிர்வாகச்சட்டம் கொஞ்சம் வளைந்து கொடுத்தாலும் பரவாயில்லை என்பது அவர்களது வேண்டுதல். இந்த இடத்தில் தான் நாம் மற்றைய இடங்களில் இருந்து வேறுபட்டு நிற்கின்றோம்.இதனை எம்முடன் இணைந்து பணியாற்றிய நண்பர்கள் மற்றும் பயனாளிகள் நன்கு அறிவர்.

புலம்பெயர்ந்த மண்ணிலிருந்து விடுமுறைக்கு வந்து செல்லும் போது, இங்குள்ள உறவுகளின் துயர்களிலும் பங்கெடுத்து செல்லும் மிகச்சில மனிதாபிமானமுள்ள உறவுகள், எமது நிறுவனத்தின்வெளிப்படையான வினைத்திறன்மிக்க செயற்பாடுகளில் ஆர்வம் கொண்டு செய்த உதவிகளில் தான், குறிப்பாக லண்டன் வாழ் எமது உறவுகளின் நம்பிக்கையுடன் கூடிய உதவிகள், சுவிஸ் வாழ்உறவுகளின் தொடர்ச்சியான உதவிகளால் தான், எம்மால் இவ்வளவு வேலைத்திட்டங்களையும் செய்ய முடிந்திருக்கின்றது. ஆனாலும் இது ஒரு ஆரம்பம் மட்டுமே.

இருப்பினும் தன்னலம் கருதாதுஅவர்கள் செய்திருக்கும் இந்த உதவிகள் இன்னமும் தொடர வேண்டும். அதற்கு பிரதிபலனாக நாம் இந்த தேசத்தில் மாற்றுத்திறனாளிகள், யாரிலும் தங்கி வாழாத, சுயமான வாழ்க்கை ஒன்றைவாழ்வதற்கான ஏது நிலைகளை உருவாக்கி காட்ட வேண்டும். இது ஓரு நீண்ட பயணம். பயனாளிகளும் கொஞ்சம் தயாராக வேண்டும். எனது சொந்த அனுபவத்திலிருந்து சொல்கின்றேன்.

நாம்கைவிடப்பட்டவர்களல்ல. எமது உறவுகள் எம்மை தாங்கிப்பிடிக்க இருக்கின்றார்கள். ஆனால் சமூக வலைத்தளங்கள் மூலம் அவர்களை ஏமாற்றி விட முடியும் என நினைக்க வேண்டாம். இதன்மூலம் அவர்கள் எம்மில் வைத்திருக்கும் தூய அன்பை நீங்கள் கொச்சைப்படுத்துகின்றீர்கள். அவர்களின் உதவிசெய்யும் மனப்பான்மையை நீர்த்துப்போக செய்கின்றீர்கள் என்கின்ற குற்றஉணர்ச்சிஉங்களுக்கு வர வேண்டும்.

இன்று இந்த வேளையில் நாம் நம்பிக்கையுடன் மூன்று முக்கிய வேலைத்திட்டங்களை முன்வைக்கின்றோம்.

இந்த திட்டங்கள் அனைத்தும் சமூக அக்கறையுடன், மாற்றுத்திறனாளிகளின் விசேட தேவைகளை உள்வாங்கி வரையப்பட்டவை. பல்வேறு கோணங்களிலும் நிதானமாக ஆலோசிக்கப்பட்டவை.சிலவேளைகளில் பல்வேறு அமைப்புகளால் ஏமாற்றப்பட்ட பயனாளிகள், அல்லது உடனடி ஜீவனோபாயத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு இவை சிறப்பான ஒன்றாக தோன்றாமல் இருக்க வாய்ப்புகள்உள்ளது. ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்கின்றோம்.

இந்த வகையான திட்டங்களுக்கு கைகொடுக்கவும், நிதிப்பங்களிப்பு செய்யவும் இங்குள்ள அதிகாரிகள், தொழில் வழங்குனர்கள்,புலம்பெயர்ந்த மக்கள் என பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவை தெரிவித்து உள்ளனர். இப்போது பந்து எங்கள் பக்கம். இந்த »மாதிரியான» அல்லது முன்னோடியான வேலைத்திட்டங்களைவெற்றிகரமாக மாற்றிக்காட்டுவதன் மூலம், இந்த தேசம் முழுவதிலும் உள்ள மாற்றுத்திறனாளிகளையும், சுயமரியாதையுடன் வாழ்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும்.

இதற்கு அனைத்து மக்களினதும், தொண்டர்நிறுவனங்களினதும், அரச அமைப்புகளினதும் மனமார்ந்த ஒத்துழைப்புகளை வேண்டிநிற்கின்றோம். நான் பெரிது, நீ பெரிது என்பதற்கப்பால் இந்தசமூகத்தின் அவலநிலை பெரிதென உணர்ந்து அனைவரும் ஒன்றாக பயணிக்க அனைவரும் முன்வரவேண்டும். இதன் மூலம் ஏராளமானவற்றை மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் இந்த சமூகம்கற்றுக்கொள்ளவும் பெற்றுக்கொள்ளவும் முடியும் என்பதை நிரூபிக்க முடியும்.

 unnamed-12-6-450x338unnamed-13-6-450x338 unnamed-11-6-450x338 unnamed-10-6-338x450 unnamed-5-7-450x338 unnamed-6-7-450x338 unnamed-7-7-338x450 unnamed-8-7-450x338 unnamed-9-7-450x338  unnamed-3-9-338x450 unnamed-2-10-450x338 unnamed-4-7-338x450unnamed-1-13-450x338


Related News

 • மீண்டும் ஒன்றுகூடும் அரசியலமைப்பு சீர்திருத்த சபை
 • யாழில் படையினர் விவசாயம் செய்து அவற்றை விற்பனை செய்வது இல்லை
 • ஐக்கிய தேசிய கட்சியின் திட்டம் தொடர்பில் எஸ்.பீ திஸாநாயக்கவின் கருத்து
 • தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம்
 • பொலிஸாரின் செயற்பாடுகள் அதிருப்தி அளிக்கின்றது
 • பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கை திரும்பினார்
 • மழையுடன் கூடிய கால நிலை இன்றும் தொடரும்
 • விக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியது நான் செய்த பாவம் – மாவை சேனாதிராஜா
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *